காட்சி ! இடம்: கமலவேணி வீடு
காலம்: முற்பகல்
(பாடகி கமலவேணி பாடுகிருள். மகள் தாழம்பூ அதற்கேற்ப அபிநயம் பிடித்து பரதநாட்டியம் ஆடுகிருள். மாணவன் இளங்கோ வருகிருன், நின்று பார்த்து ரசிக்கிருன்).
குறள்நெறி இசையமுது :
பாடல் " அறிவுடைமை ”
இராகம் காபி தாளம் : ரூபகம்
எடுப்பு
அறிவுடைமையே எல்லாம் உடைமை பிறிதுடைமையில் பெருமை எதய்யா ? நல்ல (அறி)
தொடுப்பு
செறிவுடைமையாய்த் தெளிவும் அறிவும் சேர்ந்தவரைப்பகை தான் வெல்லுமோ ? நெறியுடைய ஞானியர் நட்பினைப் பெறுதல் நேர்மையிலே நம்மறிவை
கூர்மையொடு வைப்பதுவாம் (அறி)
படுப்பு
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினுமப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவே
முடிப்பு தப்பேதுமில்லாத தன் மான நெறியில் தாழ்ந்தவர் அறிவிலரேயல்லரோ ? எப்போதும் உலகத்தோடொன்றிய வாழ்வில் ஏற்றமதை பெற்றிடுவார் போற்றியநூல் கற்றவரே (அறி)
சந்தம் தன் மனம் போனவிடந்தனில் சென்றுவிடாமலே கடிந்து நன்னெறியாதெனக் கண்டதில் துன்பமில்லாதவை தொடர்ந்து செல்லுவரே - அறிவில் வல்லவரே - தமிழில் கண்ணனிசை பாடுவதால் - எண்ணமுயர் வாகிடும் மெய் శిఖీ}