பக்கம்:பதினாறும் பெறுக.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42



இளங்: பெரியவரே ! போதுமா? இன்னும் வேணுமா?

கமல: இன்னொரு நல்ல காரியமும் செய்திருக்கிறார் இளங்கோ! உன் தந்தை அதிகமாகப் பெறக்கூடாதென்பதற்காக,

ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறந்ததும், மாலதிக்குக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துவிட்டார்.

இளங்: அஃகா! குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியத்தை என் தந்தையாரே உணர்ந்திருக்கிறாரா?

கமல: உணர்ந்தது மட்டுமல்ல ; செய்துமிருக்கிறார் :

இளங் : அப்பா ! இப்படிப்பட்ட நல்லவராகிய நீங்களா தாழம்பூ பதினாறு பெறவேண்டும் என்று நிபந்தனை போட்டீர்கள் ?

பரம: இளங்கோ? அது உங்களோட கல்யாணத்தை நிறுத்த இந்தப் பெரிய மனிதர் போட்ட திட்டமடா பின்னாலே தான் இந்தச் சதி எனக்குப் புரிஞ்சிது. முத்தன் எல்லாத்தையும் சொன்னான்.

(முத்தன் வருகிறான்)

முத்தன்: இன்னோரு சங்கதி தெரியுமுங்களா?

இளங்: என்ன முத்தா?

முத்தன்: பதினாறு பெறவேணும்னு பிறத்தியாருக்குச் சொல்லிக் கொடுத்த செல்வரங்கம், “பிள்ளைகள் அதிகமில்லாத நல்ல குடும்பம், அதுக்காகத்தான் என் மகளை இளங்கோவுக்குக் கொடுக்க விரும்புகிறேன் ; அவரு கட்டிக்கலேன்னா, பெரிய எசமானாவது கட்டிக்கிட்டும், ஏற்பாடு செய்யுடான்னு சொன்னாருங்க ! அதுக்காக ஐநூறு ரூபா லஞ்சமும் கொடுக்க வந்தாருங்க.

இளங்: சே!என்ன கேவலமிது? பெரியவரே ! சமுதாயத்தின் மேல் தளத்தில் இருப்பவர்கள் நீங்கள். சமுதாய நல் வாழ்வுக் கும், நாட்டின் பொதுநலத்திற்கும் பொறுப்பேற்க வேண் டியவர்கள் நீங்களல்லவோ?

(முத்தன் போகிறான்)

செல்வ: ஆமாம், நீ சொன்னாலும், சொல்லலேன்னாலும் என்னைப் போன்றவர்களாலேதான்

சமுதாயத்தை முன்னேற்ற முடியும்? 

இளங்: அப்படித்தான் நானும் கருதியிருந்தேன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உங்கள் ஈனத் தனம் இப்பொழுதல்லவா தெரிகிறது மகளின் வாழ்வுக் காக எதிர்பார்ப்பது சிறிய குடும்பம், மற்றவரின் தாழ்வுக் காகப் பெறச் சொல்வது பதினாறு பிள்ளைகளை !

செல்வ: போடா போ ! இந்தக் குற்றத்தை உங்கப்பனுந்தான் செஞ்சாரு,

பரம: ஆம். தவறு செய்தேன். உம்மால் உணர்ந்தேன் ; திருந்தி விட்டேன். இனி உம்மிடம் அஞ்சமாட்டேன், அது பேரில் நிபந்தனை போடவும் மாட்டேன்.

கமல: செய்த தவறை உணர்ந்து திருந்துபவர் மனிதரில் பெரியவர் ; செய்த தவறுகளை யுணர்ந்தும் அதனையே செய்து கொண்டு. வருபவர் கயவரில் பெரியவர் !

பரம : இது உண்மை. கமலவேணியின் பேச்சு ஒரு பொன்மொழி.