பக்கம்:பதினாறும் பெறுக.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
43

43

சுந்தர : அப்பா ! இனிமே நீங்க எங்கப்பா தானே? இனிமே என்னை

அனுதைன்னு சொல்லி வெர்ட்டமாட்டீங்களே ?

பரம (வருந்தி) வாடா மகனே சுந்தரம் (கட்டியனைத்து) உன்னைப் 3. பத்து வளர்க்கும் அப்பாதாண்டா நான். என் அச்சமும் அறியாமையும் உன்னை ஆளுதைன்னு சொல்லவச்சுதட்ா ! இளங்கோ நம்மை ஒரு இலட்சியக் குடும்பமா சேத்து வச் சுட்டாண்டா மகனே ! (அனைத்துக்கொள்ள கையில் மாலைகளோடு, முத்தன் ஒடி வருகிருன்.) . -

முத்தன் போச்சு போச்சு எல்லாம் போச்சு அநியாயமா போச்சு ! இளங் என்னப்பா போச்சு? எங்துே போச்சு?

முத்தன் சேலம் பிரபு செல்வரங்கத்தோட குடும்பப் பெருமை ஆடிக்காத்து

எச்சிலையாய் பறந்து போச்சு !

செல்வ டாய் ! அயோக்கியப் பயலே என்னடா ஒளர்தே? என்னுடைய

குடும்பப் பெருமை எப்பவும் கொடிகட்டிப் பறக்குமடா !

முத்தன் : பறக்குதுங்க கட்டுப்பாடில்லாத, குடும்பத்துக்குக் கெடைக்க

வேண்டியது இங்களோட குடும்பத்துக்கும் கெடச்சிட்டுதுங்க. செல்வ: கபோதிப்பயலே! என்னடா கதையளக்கிறே ?

முத்தன். இது நடந்த கதைங்க. எதுத்த வீட்டுக் குப்புசாமியைக் காத விக்க ஒங்களோட ஏழாவது மகள் சண்பகம் இந்தக் கல்யான நிர்ப்பந்தம் பிடிக்காமெ கண்ணியமா காதலனேட வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க. தந்தைக்கு மகள் எழுதி வச்ச கடுதாசியோட தோ வெளியே வந்து காத்திருக் கிருன் ஒங்க வீட்டு சமையல்காரன் ! போங்க போய்ப் பாருங்க !

செல்வ : ஆங் ஐயோ ஐயோ !

(வயிற்றில் அடித்துக் கொண்டு ஒடுகிறர் செல்வரங்கம்)

கமல: குடும்பப் பெருமை வீட்டோடு கொடிகட்டிப் பறக்கவில்லை. வெளியே

கொடியைத் தூக்கிக்கொண்டும் பறக்கிறது போலும்.

முத்த குட்டுப்பட்டாலும் செல்வாங்கம் மோதிரக் கையாலேதான் குட்டுப் . பட்டிருக்காருங்க. குப்புசாமி படிச்ச பையனுங்க, நல்ல பையன் ஒழுக்கமுள்ளவன். அந்தக் காதல் கலப்பு மணத் தம்பதிகளுக்கு நம்ப வாழ்த்துச் சொல்லணுமுங்க. தாழம்: ஆல்ை, பதினறும் பெறச் சொல்லி மட்டும் யாரும் வாழ்த்த

வேண்டாம்.

கமல : கட்டுப்பாடாக மூன்று பெற்று கண்ணியமாக வாழட்டும். அதுதான்

சிவப்பு முக்கோணச் சிறப்பு.

பரம : கமலவேணியம்மாள் என்னை மன்னிக்கணும். போலி கவுரவத்திற் கும், வறட்டு ஜம்பத்திற்கும் அடிமையாய்க் கிடந்த என்க்கு நல்ல பாடம் கெடைச்சிட்டுது. சின்ன குடும்பத்திலேதான் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்வான நடத்தையும் இருக்க முடியும்கிறதை நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன். . கமல மிக்க மகிழ்ச்சி பெருமைக்கும் எனச்சிறுமைக்கும் தத்தி

கருமமே கட்டளைக்கல்” என்ருர் வள்ளுவர். அந்த கல் நீங்கள் பத்தரை மாற்றுத்தங்கம் என்பதைத் வாகக் காட்டிவிட்டது.