பக்கம்:பதினாறும் பெறுக.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44

44

முத்தன்: எசமான்! சின்ன எசமானும், தாழம்பூவும் கல்யாணம் பண்ணிக்கிறதிலே, இன்னமும் தடை ஏதாச்சும் உண்டுங் களா?

பரம: ஏதும் கிடையாது, முத்தா! கல்யாணத்துக்கு கமலவேணியம்மா போட்ட குடும்பக் கட்டுப்பாடு நிபந்தனைகளை அப்படியே மனப்பூர்வமா ஒப்புக்கிறேன். கல்யாணம் நடக்கட்டும்,

முத்தன் : அம்மா! ஒங்களுக்கு ஏதாச்சும் ஆட்சேபணையுண்டா?

கமல: என் செல்வமகள் தான் விரும்பிய காதலனைப் பெறுகிறாள். குடும்பநல வாழ்வில் நான் கொண்ட கொள்கை வெற்றி பெறுகிறது. திருந்திய தீரமுள்ள ஒரு நல்ல சம்பந்தியை நான் பெறுகிறேன். இதில் என்னைக் காட்டிலும் அதிக மாக மகிழ்வோர் யாருமிருக்க முடியாது. புதுவாழ்வு பெறுகின்ற மாலதியின் கையால் இந்த மணவினை நடைபெறட்டும்.

முத்தன்: ஆஃகா! அதுதான் பொருத்தம். அப்படியே நடக்கட்டும்.

(முத்தன் மாலைகளை பரமசிவத்திடம் கொடுக்கிறான், பெற்று அவர் மாலதியிடம் கொடுக்கிறார், முதலில் அவரது பாதங்களில் வணங்கிப் பின்னர் மாலை களைப் பெற்று இளங்கோவிடமும், தாழம்பூவிட மும் கொடுக்கிறாள் மாலதி, அவர்கள் மாலையை மாற்றிக் கொள்கின்றனர்).

கமல: பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

பரம: பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

முத்தன்:என்ன? இல்லை! இல்லை! பதினாறு பெருமைகள். பதினாறு பேறுகள்!

(எல்லோரும் வாழ்த்துகின்றனர். கமலவேணியும்,இளங்கோவும் பாடுகின்றனர்).

கமல: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்.அளவோடு பெற்று அறிவோடு வாழ்க

இளங் : தெளிவுக்கு எங்கள் வாழ்விது கண்டீர்.திட்டமில்லாமலே பெற்றிட வேண்டாம்

இருவரும்:

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் நிலம் வாழிய தமிழர்கள் வாழியவே வாழ்வு வளம்பெற குடும்பநலம் பெறும் வகையினை ஊர்ந்து வாழியவே!

முற்றும்.