பக்கம்:பதினாறும் பெறுக.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3

3

இளங் : (யோசித்து) ஆம். இது ஒரு சிக்கலான சங்கதிதான். ஆளுல் . . . . எங்கள் பேராசிரியர் கலை கலைக்காகவே என்பதைப் பொருத்தமாகச் சொன்னரே!

கமல : அப்படிச் சொன்ன உங்கள் பேராசிரியர் சைவராக இருந்திருந்தால்' சின் நெறிக்கலைகளே நுகரச் சொல்லியிருப்பார். வைண்வராக இருந்திருந்தால், வடக்கலைகளே சுவைக்கச் சொல்லியிருப்பார். சமயச் சார்பற்றபொது நெறியாளராக இருந்திருந்தால், திருக் குறளின் வாழ்வுக் கலையைச் சுவைக்கச் சொல்லியிருப்பார். இல்லையா? நினைத்துப் பாருங்கள்.

இளங் (எதையோ உணர்ந்தவன் போல் வாய்மடக்கி, கை சொடுக.கி.) அடிச்சக்கை. இப்பத்தான் அதோட ரகசியம் புரியுது. கலை கலைக்காகன்னு சொன்ன எங்கள் வைணவப் பேராசிரியர் திருக்குறளின் வாழ்வுக்கவையைப் பரிகசித்தாரே. பக்திக் கலையே முக்கியம். அது பக்த விஜயத்தில் கிடைக்கும் என்றல்லவா சொன்னர்.

கமல: இப்பொழுதாவது புரிந்ததே. இளங்கோ இதற்குத்தான் திரு வள்ளுவர் அப்பொழுதே சொன்னர். “ எப்போருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு " என்று.

இளங் இது தமிழில் தானே?

கமல ஆம்: ஆங்கிலத்தில் ஷெல்லியைப் படிக்கலாம். ஷேக்ஸ்பியரைப் படிக்கலாம், சாக்ரட்டிசைப் படிக்கலாம், அரிஸ்ட்டாட்டிலைப் படிக்கலாம்! ஆனல் தமிழில் வள்ளுவனைப் படிக்காது விட்டால் நாம் எடுப்பார் கைக்குழந்தையாகி விடுவோம். நமது பண்பை, பகுத்தறிவை, அன்பை, அறநெறியை நாமறிந்து கொள்ளமுடியாது. இலட்சிய வாழ்வை நாம் பெறவும் முடியாது. கொஞ்சம் பொறு இதோ வந்தேன்.

(அவசரமாக உள்ளே செல்கிருள் கமலவேணி)

இளங்: மை டார்லிங் தாழம்பூ. பெரிய விவாதத்தில் என்னை மாட்டி விட்டாயே உன் தாயார் கமலவேனியம்மாளின் அறிவாற்றல் அடேயப்பா விவாதம் பேசிக்கெலிக்க முடியாது போல்லிருக் கிறதே.

தாழம்பூ வாய்ப்பேச்சில் மட்டுமல்ல, நடைமுறையிலும் ஒழுக்கம், நீதி

நேர்மைகளில் பிடிவாதமுள்ளவர்கள்.

இளங்: ஐயயோ, அப்படியாளுல் நான் உன்னிடம் பழகுவதையே குற்ற

மாகக் கருதுவார்களோ? (அவள் கைபற்றி தாழம்பூ!

தாழம்பூ: இளங்கோ பயப்படாதீர்கள் பழகுவதைக் குற்றமாகக் கருத மாட்டார்கள். இதுபோல பழகும் குற்றத்தை லேசில் விடவும் மாட்டார்கள்,

இளங் (வெடுக்கென்று விட்டு) ஒரு காதலனும், காதலியும் பழகுவதில்

குற்றமுள்ளது எது, குற்றமற்றது எதுவென்பது எனக்கு விளங்கவில்லையே.

(கையில் திருக்குறளை விரித்துப் படித்தவண்ணம்

வருகிருஸ் கமலவேணி) “அருமையுடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை

முயற்சி தரும்”