4.
இளங்: இது திருக்குறள்தானே அம்மா?
கமல : ஆமாம் இளங்கோ.
இளங்: இதன் பொருள்?
கமல: தமது பலவீனத்தை நினைத்து இது நம்மால் முடியக்கூடிய காரிய மல்லவ்ே என்று தளர்ந்து விடக்கூடாது. அதனைச் செய்து முடிக்கும் பெருமையின் முயற்சியானது தரும். எதற்கும் தள்ார்த் முயற்சி தேவையென்கிறர் திருவள்ளுவர். இவை போன்ற அறிவுரைகள் நிறைந்த இக்குறளமுது உன் வாழ்வுக்கு வளம் சேர்க்கட்டும். இந்தா
(கொடுக்கிருள், அன்போடு பெற்றுக்கொள்கிருன்)
இளன்: (பிரித்துப் படிக்கிருன்) அருமையுடைத்தென்று அசாவாழை வேண்டும். பெருமை முயற்சி தரும். பெருமை முயற்சி தரும். நான் வருகிறேன். வணக்கம். பெருமை முயற்சி தரும். பெருமை முயற்சி தரும்.
(படித்துக்கொண்டே போகிருன் இளங்கோ
காட்சி 2
இடம் : பரமசிவம் வீடு
காலம் : பிற்பகல்
(செய்தித்தாள் படித்தவண்ணம் நாற் காலியில் உட்கார்ந்திருக்கிருர் மிரா சுதார் பரமசிவம்).
பரமசிவம் (படித்தல்) "சந்திரனில் மனிதன் இன்னும் பத்தாண்டுகளில் குடியேறலாம். நிலவியல் ஆராய்ச்சி வேகமாக நடைபெறு கிறது. மனித சக்தி விஞ்ஞானத்தின் துணை கொண்டு இயற் கையை வெல்லுகின்ற காலம் வெகு துரத்தில் இல்லை”. கிழித்து விட்டார்கள் வெட்டிப்புயல்கள்.
(அப்பொழுது வருகிருன் முத்தன் கையிலே
கீரைக்கத்தைகளோடு)
முத்தன் ஆமாங்க எசமான் அதெப்படிங்க எங்களுக்குத் தெரியுமங்க
கிழிச்சது?
பரம எதையடா கேக்கறே?
முத்தன் அது தாங்க, தண்ணி எறைக்க பம்பு செட்டுதான் வேணும்
தோலுப்பறி வேணுமுண்ணு, நம்ப தோப்புக்காரணுங்க பறிகளைக் கிழிச்சுப் போட்டானுங்களே! -
பரம வியந்து) அட! தோலுப்பறிகளைக் கிழிச்சுப் போட்டானுங்களா
எண்டா என்ன கொழுப்படா அவன்களுக்கு?
முத்தன் ஆமா....நீங்க.. கிழித்து விட்டான்கள், வெட்டிப்பசெங்கண்ணு
சொன்னிங்களே, எதை?
பரம: முத்தா! பேப்பர்லே போட்டிருக்கிறன். சந்திரன்லே மனிதன் இன்னும் பத்தாண்டுகுள்ளே குடியேறலாமாம். மனித சக்தி இயற்கையை கெலிச்சுப் .ே ம் செஞ்சுப் பேர்டு வானுங்ளான்னு என்ளுே மனம்கேட்டுது, கேட்டேண்டா.