பக்கம்:பதினாறும் பெறுக.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

6

பரம: (சினந்து) டேய் ! அயோக்கியப்பயலே! பரிகாசமா பண்றே என்னைத்தாம் படிக்கிறவன்ன நெனச்சுகிட்டே ? மண்டையைப் பொளந்து, பொளந்து போடுவேன் பாத்துக்கோ !

இளங்: பொறுங்களப்பா முத்தனின் கேள்வி வரம்பு கடந்ததாக இருக் கலாம். ஆனால் அதிலுள்ள உண்மையை நம்மால் மறுக்க முடியாதே !

பரம: இளங்கோ ! நீ என்னடா சொல்றே !

இளங்: இரும்புப்பிடி வைதீகமாக இருந்தாலும், காலமாற்றத்தைத் துரும்பாக ஒதுக்க முடியாதப்பா தயவு செய்து விவசாயத் திற்கு பம்புசெட்டு வைத்து விடுங்கள். நான் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு விவசாயம் செய்யும்பொழுது யந்திரக் கலப்பையால் உழுது விதைத்து, யந்திரத்தின் மூலமாகவே ஏராளமாக அறுவடை செய்வேன். நாட்டின் உணவு நெருக்கடியைத் தீர்க்க உதவுவேன்.

பரம: டாய், முத்தா !

முத்தன்: எசமான்

பரம: தம்பி சொல்றதைக் கேட்டியா ? இளங்கோவோட பேச்சிலே எப்பவும் ஒரு உண்மை நியாயம் இருக்கத்தான் செய்யும் தம்பியோட இஷ்டம் போலவே செஞ்சுப் போடுவோம்.

முத்தன்: ஆமாங்க அதைத்தானே நானும் எதிர்பார்க்கிறேன்.

இளங்: அப்பா ! எங்கள் கல்லூரியின் கலைப்பணியில் நான் அதிகமாகப் பங்கு பெற்று வருகிறேன். இசை, நடிப்பு ஆகியவற்றில் எனக்கு நல்ல திறமை இருப்பதாக எங்கள் கல்லூரித் தலைவர் சொல்லுகிறாரப்பா !

பரம : அப்படியா சந்தோஷம் தம்பி, நாங்கூட சிறு வயசிலே நாடகத்திலே பாட்டுப்பாடி நடிச்சிருக்கிறேண்டா.

இளங் : அப்படியா ? என்ன வேஷம் போட்டீர்களப்பா ?

பரம: சந்திரமதி வேஷம். அந்தக்காலத்திலே வேலுநாயர் அரிச்சந்திரராகவும், அனந்தநாராயணன் சந்திரமதியாகவும் வேஷம் போட்டு நடிப்பாங்க பாரு. (யோசித்து) ச்சு.ச்சு சுடலையிலே லோகிதாசன எரிக்க வந்த சந்திரமதியைப் பார்த்து, அரிச் சந்திரன் வாய்க்கரிசியும், முழத்துண்டும் - வேணும்னு கேட்டான். பாவம் கொடுக்க முடியலே, சந்திரமதியாலே. காசு இல்லேன்ன ஒங்க முகத்திலே தாலி இருக்குதென்னான். அப்ப சந்திரமதி அழுது புலம்பினா பாரு. (பாடுகிறார்) ஐயயோ....

முத்த: எசமான் கொஞ்சம் நில்லுங்க. நீங்க நல்லாத்தாம் பாடுவீங்க! இப்ப வேணாம் அந்தக் கட்டம். அப்புறம் வச்சுக்கலாம். மொதல்ல சந்தோஷமா விவசாயத்துக்குப் பம்பு செட்டு, வாங்கப் பொறப்படுங்க.

பரம: முத்தா ! கவலைக்காரன்னா நீ தாண்டா வேலைக்காரன்.

(தட்டிக் கொடுக்கிறார்)