பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ix அகழ்வாராய்ச்சி மூலம் அறிஞர்கள் அறுதியிட்டுள்ளனர். அப்பொழுது இருந்த இலக்கியங்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். வேதகாலம் என்பது கி.மு. 1500 முதல் 1000 வரை உள்ள இடைப்பட்ட காலம் என்பர். இன்று இந்தியாவின் வடமேற்கில் உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தான் வேதமும், அதில் கூறப்பட்ட சடங்குகளும் பயின்று வந்துள்ளன. கி.மு. 1000 வாக்கில் வேதத்தின் முடிமணியாக உள்ள உபநிடதங்கள் தோன்றலாயின. கதோபநிடதத்தில் காணப்பெறும் நசிக்கேதார் கதை போன்றவை மூலம் தத்துவங்களையும் மெய்ப்பொருளையும் விளக்கும் வழிமுறையை நமது முன்னோர்கள் மேற்கொண்டனர் என்பதை அறிகின்றோம். இந்த அடிப்படையில் தோன்றியவைதாம் புராணங்கள். பதினெண் புராணங்கள் என்று சொல்லப்படுபவை எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுச் சொல்லத்தக்க சான்றுகள் இல்லை. இதில் வரும் பாடல்களுள் சில மிகப் பழைய வடமொழியிலும், பல பாடல்கள் 4, 5ஆம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த வடமொழியிலும் இயற்றப்பட்டுள்ளன. எந்த ஒரு புராணமும் அது தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து வேதங்களைப் போல அப்படியே இன்றும் உள்ளன என்று சொல்லுதற் கில்லை. இவை எந்தெந்தப் பிராந்தியங்களில் தோன்றினவோ அந்தந்தப் பிராந்தியங்களின் பழக்க வழக்கங்களையும் தம்மிடையே கொண்டுள்ளன. இவை பரவப் பரவ இடைச் செறுகல்கள் மிகுதியும் உள்ளே புகுந்தன. ஒரே புராணத்தில் 6,000 பாடல்கள் உள்ளன என்று சிலரும் 12,000 பாடல்கள் உள்ளன என்று சிலரும் கூறுவது இதனால்தான். எந்த ஒரு புராணமும் தோன்றிய பொழுது இருந்த வடிவுடன் இன்றில்லை என்பது தெளிவு. Puranas' என்ற தலைப்பில் சில நூல்களை வெளியிட்டுள்ள