பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 பதினெண் புராணங்கள் சுரதி சந்திரிகா. அவர்களுக்குச் சியாமபாலா என்ற பெண் குழந்தை இருந்தது. ஒருநாள் குழந்தை வெளியே விளையாடச் சென்றிருந்தபொழுது இலட்சுமி தேவி ஒரு வயதான பிராமணத்தி வடிவம் கொண்டு அரண்மனைக்கு வந்தாள். அரண்மனைக் காவல்காரன், 'அம்மா, நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?’ என்று வினவ, அரசியின் பழைய பிறப்பையும், இப்பொழுது அவள் செய்யத் தவறிய சில காரியங்களையும் அவருக்கு நினைவூட்ட வந்தேன்' என்றாள். காவல்காரன், 'அம்மா நீங்கள் சொல்வது புரியவில்லை என்று சொன்னவுடன் இலட்சுமி தேவி விவரமாகப் பின்வருமாறு கூறினாள்: இப்பொழுது அரசியாக இருக்கும் சுரதி சந்திரிகா, முன் ஜென்மத்தில் ஒரு வைசியனின் மனைவியாக இருந்தாள். எவ்வித நற்பண்புகளும் இல்லாமல் செல்வச் செருக்காக இருந்தாள். கணவனிடம் சண்டை போட்டுக்கொண்டு அவனை விட்டுச் சென்றாள். சென்ற அவளை மனித ரூபத்தில் இருந்த லட்சுமிதேவி, துயரம் நீங்க வேண்டுமானால் இலட்சுமி விரதம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியவுடன் இந்த வைசியன் மனைவி செம்மையான முறையில் இலட்சுமி விரதம் இருந்தாள். அதன் பயனாக அவள் இறந்தவுடன் விஷ்ணு லோகம் சென்று பல காலம் அங்கே வாழ்ந்தாள். புண்ணிய பயன் தீர்ந்தவுடன் இப்பொழுது சுரதி சந்திரிகா என்ற பெயருடன் இந்த அரசனின் மனைவியாக வாழ்கிறாள். இப்பொழுதும் செல்வச் செருக்கில் எல்லாவற்றையும் மறந்து இலட்சுமி விரதம் இருப்பதையும் மறந்து விட்டாள். அதை அவளுக்கு நினைவூட்டத்தான் வந்தேன் என்ற கூறியவுடன் காவல்காரன், உடனே அரசியிடம் சென்று, இந்த பிராமண அம்மாள் சொன்னதைச் சொல்லவே, அரசி அவளை உள்ளே