பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 பதினெண் புராணங்கள் பராசரர் விடை சொல்வதுபோல் அமைந்துள்ளது இப் புராணம். இப்புராணம் ஆறு பகுதிகளாகவும், 126 அதிகாரங் களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நாலாவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டுப் பழங்கால மன்னர் களின் வம்சாவளி பற்றிக் கூறுவதாகும் அது. ஒரு புராணத்திற்குரிய ஐந்து பண்புகளும் விஷ்ணு புராணத்தில் முழுவதுமாக அமைந்துள்ளன. முதற் பகுதி- பிரபஞ்சம் தோற்றம் பற்றியதாகும். இரண்டாம் பகுதி- இந்நாட்டுப் புவியியல் பற்றியும், வானியல் பற்றியும் கூறுவது மூன்றாவது பகுதி- மன்வந்திரங்கள், யுகங்கள் பற்றிய விளக்கமாகும். இதனுடன் இந்நாட்டின் சமுதாய அமைப்பு, நால்வகை வர்ணம் ஆகியவை பற்றியும் பேசப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சூரிய, சந்திர வம்ச மன்னர்கள் பற்றிய பட்டியல் தரப் பட்டுள்ளது. ஐந்தாவது பகுதியில் கிருஷ்ணனுடைய வரலாற்றுப் பகுதியும் குப்த மன்னர்கள் பற்றிய செய்தியும் பேசப்பட்டுள்ளது. ஆறாவது பகுதி கலியுகத்தில் மக்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது. பராசர முனிவரைப் பார்க்க ஒருமுறை மைத்ரேய முனிவர் வந்தார். மைத்ரேயர் பராசரரைப் பார்த்து, 'படைப்பு எப்படித் தொடங்கிற்று என்பதைத் தாங்கள் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார். பராசரர் பதில் கூறத் துவங்கினார். தொடக்கத்தில் எங்கும் நீரே நிரம்பி இருந்தது. அதில் ஒரு பெரிய முட்டை இருந்து கொண்டிருந்தது. முட்டையினுள் இந்த உலகத்தில் நாம் காண்கிற சர, அசரப் பொருள்கள்