பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


X திரு. குல்கர்னியின் கூற்றுப்படி எந்த ஒரு புராணமும் ஆதியில் தோன்றிய முறையில் இன்று கிடைக்கவில்லை. மூலநூல் காணாமல் போகவே பிற்காலத்தவர் புதிதாகப் பாடி பழைய பெயரை வைத்து வெளியிட்டுள்ளனர் என்று கூறுகிறார். இதுபற்றி பிரம்மவைவத்தர், இலிங்க புராணங்களின் முன்னுரையில் பேசப்பட்டுள்ளதைக் காண வேண்டும். - இந்தப் புராணங்கள் பலவற்றிலும் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, அழிவு, மறுபடியும் தோற்றம் என்பவை பற்றி விரிவாகப் பேசப்படுவதைக் காணலாம். என்றாலும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இவை ஒன்றுபோலக் காணப்பட்டாலும், ஒரு புராணத்திற்கு, ஒரு புராணம் இதே விஷயங்களை அதிக வேறுபாட்டுடன் சொல்லிச் செல்கின்றன. எல்லாப் புராணங்களும் ஒரே காலத்தில் தோன்றியிருக்க முடியாது. ஒரே இடத்திலும் தோன்றியிருக்க முடியாது. எனவே இந்தக் காலதேச வேறுபாட்டால் இந்த முரண்பாடுகள் தோன்றியிருக்கலாம் என்று நினைப்பதில் தவறில்லை. இதற்கு அடுத்தபடியாகக் கால அளவைக் குறிப்பிடுவதில் பெரும்பாலும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். கண்ணிமைப் பொழுது, கை நொடிப் பொழுது என்பவை நிமிஷா என்ற பெயரில் பேசப்படுகின்றன. இதில் தொடங்கி ஆண்டுக் கணக்கு வரையில் சென்றுள்ளன. 43,20,000 மனித ஆண்டுகள் கொண்டது ஒரு மகாயுகம் என்றும், 71 மகாயுகம் கொண்டது ஒரு மன்வந்திரம் என்றும், 14 மன்வந்திரம் கொண்டது ஒரு கல்பம் என்றும், ஒரு கல்பம் பிரம்மனுக்கு ஒரு நாள் என்றும் சொல்லப்படும். பிரம்மனுடைய ஒரு நாள் முடிவில் பிரளயம் என்று சொல்லப்படுகின்ற பேரழிவு ஏற்படு கின்றது. பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிரபஞ்ச உற்பத்தி தொடங்குகிறது. இந்தக் காலக் கணக்கில்