பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 81 எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார். வெளியே ஆகாயம், காற்று முதலிய ஐந்தும் இருந்தன. பூமி நீருக்கடியில் பாதாள லோகத்தோடு சேர்ந்து இருந்தது. பூமியை மேலே கொண்டுவர விரும்பிய விஷ்ணு வராக வடிவம் எடுத்துப் பாதாளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டது. பூமியை எடுத்துத் தனது இரண்டு தந்தங்களின் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு, பூமியை நீரில் மிதக்க விட்டார். நீரில் மிதந்து கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்ற பெயர் பெற்ற விஷ்ணு, பிரம்மன் வடிவைத் தாங்கி உலகத்து உயிர்களை எல்லாம் படைக்கத் தொடங்கினார். முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும், விலாவிலிருந்து வந்த பிறர்களும் ஆவர். படைக்கப்பட்ட யட்சர்கள் படைத்தவனாகிய பிரம்மனையே தின்ன முற்பட்டனர். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என்று ராட்சதர்கள் தடுத்தனர். இதன்பிறகு பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த ரோமத்தில் கந்தர்வர்கள் உண்டாகினர். பிரம்மனின் நெஞ்சிலிருந்து செம்மறி ஆடுகளும், வாயிலிருந்து வெள்ளாடுகளும், வயிற்றி லிருந்து கால்நடைகளும், பாதத்திலிருந்து யானை, குதிரை, மான், ஒட்டகம் ஆகியவையும் உண்டாயின. உருத்திரனின் தோற்றம் ஒரு காலத்தில் பிரம்மன் தமக்கு ஒரு அழகிய புத்திரன் வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் மடியில் அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கிடந்த குழந்தை ஒயாது அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்த வேண்டுமானால் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அக்குழந்தை ш.ц.-6