பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஷ்ணு புராணம் 83 சிறப்பை அறியாத தேவர்கள் தலைவன், அந்த மாலையை வாங்கி ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்து விட்டான். அற்புதமான வாசனையைக் கண்ட ஐராவதம் மேலும் அந்த வாசனையை அனுபவிப்பதற்காக மாலையின் பக்கமாகத் தனது துதிக்கையை நீட்டிற்று. ஆனால் மாலை தவறிக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழுந்த மாலையைக் கண்ட துர்வாசர் மிக்க சினம் கொண்டார். இந்திரன் எவ்வளவு மன்றாடி மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. இலட்சுமி உன்னை விட்டுப் போய்விடுவாள் என்று சாபமிட்டார். இந்திரன் அமராவதி திரும்பிச் சென்றவுடன் அந்நகரமே பாழ்பட்டுச் சீரழிந்து காணப்பட்டது. காரணம், இலக்குமி அதை விட்டுப் போய்விட்டதுதான். திகைத்துப் போன இந்திரன் தேவருடன் சேர்ந்து பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூறினான். நான்முகன் இது என்னால் தீர்த்து வைக்கப்படக் கூடியது அன்று. வாருங்கள். விஷ்ணுவிடம் சென்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இந்திரன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஷ்ணு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உண்டால் அசுரர்களை வெல்லலாம் என்று கூறினார். அப்படியே செய்வதென்று முடிவாயிற்று. ஆனால் பாற்கடலை தேவர்கள் மட்டும் கடைய முடியாது. அசுரர்களின் உதவியும் தேவை. எனவே அசுரர்களை அழைத்து இதனைச் செய்தால் கிடைக்கும் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தருவதாக தேவர்கள் பொய் கூறினார்கள். இதை அறியாத அசுரர்கள் முயற்சியுடன் கைகொடுக்க முன்வந்தனர். மேரு மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி திருமால் கொண்ட மிகப் பெரிய கூர்மம் (ஆமை) முதுகில் மேரு மலையை நிறுத்திக் கடைந்தார்கள். வாசுகியின் தலைப் பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். கயிறாகப் பயன்பட்டதால் வாசுகி பெருந்துன்பமுற்று விஷப்