பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 87 எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்ய கசிபு தனக்குமேல் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால் தைத்தியர்கள், தேவர்கள் ஆகிய அனைவரும் தன்னையே வணங்க வேண்டும், தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என்று ஆணையிட்டான். மேலும் தைத்திய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப் பட்டான். எனவே பகைவனின் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது ஹிரண்யனின் கட்டளை. இந்நிலையில் பிரகலாதன் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை ஒரளவு வளர்ந்தவுடன் ஒர் ஆசிரியனை நியமித்து அக்குழந்தைக்குக் கல்வி புகட்ட உத்தரவிட்டான். கல்வியைத் தொடங்கும் பொழுது விஷ்ணுவின் பெயரைச் சொல்லக் கூடாது என்றும், ஹிரண்யன் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் குரு கட்டளையிட்டார். ஆனால் பிரகலாதன் அதற்கு இசைய வில்லை. அவன் விஷ்ணுவின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான். சில காலம் கழித்து மகனின் கல்வி வளர்ச்சி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிய ஹிரண்யன் பிள்ளையையும், ஆசிரியரையும் வரவழைத்தான். மகனுடைய கல்வியைச் சோதிக்க எண்ணிய ஹிரண்யன் என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டான். பிரகலாதன் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்லி அவன் பெருமையைச் சொல்லத் துவங்கினான். எல்லையற்ற கோபம் கொண்ட ஹிரண்யன் 'யார் அந்த விஷ்ணு?’ என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே! அந்த விஷ்ணு உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான். காணப்படுகின்ற எல்லாவற்றுக் குள்ளும் இருக்கிறான். என்று கூறினவுடன் எல்லையற்ற சினம் கொண்டான் ஹிரண்யன். தைத்திய சேனையை விட்டு இப்பிள்ளையைக் கொன்று விடுங்கள் என்றான். அவர்கள் எத்தனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடைபெற