பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பதினெண் புராணங்கள் வில்லை. ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளை விட்டுப் பிரகலாதனைக் கடிக்கச் செய்தார்கள். ஒன்றும் நடைபெற வில்லை. கையையும் காலையும் கட்டி அரண்மனையில் இருந்து கீழே எறிந்தார்கள். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ஆசிரியரை அழைத்து, 'மறுபடியும் இவனைக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல முறையில் கல்வி கற்பியுங்கள் என்று கூறினான். எவ்விதப் பயனும் விளையவில்லை. இம்முறை சுக்ர நியதியின்படி பகைவர்களை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் கற்பித்தார்கள். பல நூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிள்ளையை வரவழைத்தான். இந்த முறை விஷ்ணுவைப் பற்றிப் பேச்செடுக்காமல் 'சுக்ரநீதியின்படி பகைவர்களை எவ்வாறு வெல்வது?’ என்று கேட்டான் ஹிரண்யன். அதற்குப் பிரகலாதன் "பகைவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரிலும் விஷ்ணுவே இருக்கின்றார். ஆதலால் யார் யாருக்கு பகை' என்று பிள்ளை பதில் கூறினான். கோபம் கொண்ட ஹிரண்யன், பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து அவனை சமுத்திரத்துக்குள் போட்டுவிட்டு அவன் மேலே வராமல் இருக்க மலைகளை எடுத்து அவன்மேல் போடுமாறு செய்தான். இத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த ஹிரண்யன் மகனே! இத்தனை ஆபத்துக்களையும் வெல்லக் கூடிய சக்தியை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தந்தையே! இதில் என்னுடைய சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் விஷ்ணுவின் செயல்தான்" என்று கூறினான். இந்த நிலையில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்று பிரகலாதனுக்கு முடிசூட்டினார். இந்தப் பிரகலாதன் பரம்பரையில் வந்தவர்தான் மாபலி சக்கரவர்த்தி. நரசிம்ம மூர்த்தி பிரகலாதனைப் பார்த்து, உனக்கு என்ன வரம்