பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பதினெண் புராணங்கள் ஜடபரதன் கதை முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது. தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து வேத சாத்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றான். பரப் பிரம்மம் பற்றிய ஞானம் பெற்றதால் வேதங்கள் படிப்பதில் நாட்ட மில்லாமல் துர்நாற்றமுடைய தோற்றத்துடன் உலவி வந்தான். அவன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவினர்கள் அவனுக்குக் கெட்டுவிட்ட உணவையே தந்தனர். இகவுமதி ஆற்றின் கரையில் கபில முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒருநாள் செளபிர என்ற அரசன் ஞானம் பற்றித் தெரிந்து கொள்ளப் பல்லக்கில் ஏறி, கபில முனிவரை