பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 பதினெண் புராணங்கள் திருக்கும் பரம்பொருளாகிய விஷ்ணுவே பரமாத்மா எனப் படுபவர். முழுமையான ஞானம் பெற்றவனுக்கு ஜீவாத்மா விற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. மாயையில் அகப்பட்டிருப்பவனுக்கே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுபட்ட பொருள்களாகத் தெரியும். பரதன் ஒரு கதையையும் அரசனுக்குக் கூறினான். பல ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மனின் மகனாகிய ரிபுவும், ரிபுவின் சீடனும் புலத்தியனின் மகனுமான நிடகாவும் தேவிகா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள விராநகரா என்னுமிடத்தில் வசித்தனர். பரப் பிரம்மம் பற்றி அறிந்து கொள்வதற்குத் தயாராக இல்லாத காரணத்தால் நிடகாவை ஊருக்குள் சென்று வசிக்கும்படி கூறினான் ரிபு. ஒருநாள் தன் சீடனாகிய நிடகாவைக் காணச் சென்றான் ரிபு. தன்னைக் காணவந்த தன் ஆசிரியனை உண்ண அழைத்தான், நிடகா. அவனைப் பார்த்து ரிபு என்ன உணவு படைக்கப் போகிறாய்? தூய்மையானதா?’ என்றான். அதற்கு நிடகா அரிசி, பழங்கள் மற்றும் இனிப்புகள் இருப்பதாகக் கூறினான். இது அசுத்தமான உணவு. அரிசியில் செய்யப் பட்ட உணவு. மற்றும் தயிர் கொடுக்குமாறு கூறினான் ரிபு. ரிபு உணவு உண்டபின் தன் ஆசிரியனைப் பார்த்துப் பசி அடங்கிவிட்டதா என்றும், இங்கு எதற்காக வந்தீர்கள் என்றும் கேட்ட நிடகாவைப் பார்த்து, "பசியோடு இருப்ப வர்களுக்கே உணவு உண்டபின் பசி அடங்கிவிடும். எனக்குப் பசியில்லை. அதனால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. உடம்பிற்குதான் பசி எடுக்கும். நான் உடம்பல்ல. நான் எங்குச் செல்கிறேன் என்று வினவினாய். என்னுடைய ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது. நீ காணும் நான் நானல்ல. நீ நீயல்ல. . .