பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 93 நீ அளித்த உணவைப் பற்றிக் கவலையில்லை. ஏனெனில் அனைத்துமே ஒரே மூலப் பொருளில் இருந்து செய்யப் பட்டவை. இதுவே உண்மையான ஞானம்’ என்றான். இதைக் கேட்ட நிடகா, அஞ்ஞானம் அகன்று தன் ஆசிரியனைப் பணிந்து வணங்கினான். ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நிடகாவைக் காண வந்தான் ரிபு. ஊருக்கு வெளியே புல்லைத் தின்று கொண்டு, மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட நிடகா மற்றவர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வந்தான். பரமாத்மாவினின்று வேறுபட்டது எதுவுமில்லை என்ற உண்மையான ஞானத்தை போதித்து விடை பெற்றான் ரிபு. இக்கதையைக் கூறிய பரதன், ஒர் அரசன் அறிந்து கொள்ளவேண்டிய ஞானம் இதுவே. மேகம் ஒன்றேயாயினும் சில சமயம் நீலமாகவும், சில சமயம் வெள்ளையாகவும் தோன்றுகிறது. அதுபோல் மாயையின் வசப்பட்டவர்கள் ஆத்மாவை வேறு வேறு என நினைக்கின்றனர். உண்மையில் ஆத்மா என்பது ஒன்றுதான். ஆத்மாவைத் தவிர உலகில் வேறு எதுவுமில்லை, நாம் அனைவரும் இந்த ஆன்மாவின் பிரிவுகளே என்று கூறினான். வேதவியாசர் பலர் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வேதவியாசராக உருவெடுக்கிறார். உருவெடுத்த பின்பு வேதங்களை வகைப் படுத்துகிறார். வைவஸ்வத மன்வந்திரங்களாகிய இந்தக் கால கட்டத்தில் வேதவியாசர் வேதங்களை 28 முறை வகைப்படுத்தி விட்டார். இதுவரை தோன்றியுள்ள வேதவியாசர்கள் இருபத்தெட்டு பேர் ஆவர். அவர்கள் சுவயம்பு வேதவியாசர், பிரஜாபதி வேதவியாசர், பிருஹஸ்பதி வேதவியாசர், மிருத்யு