பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 95 யனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலைமேல் காலை வைத்து அவரைக் கொன்றுவிட்டார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து இந்த தோஷம் என்னை விட்டுப் போவதற்கு ஒரு யாகம் செய்யவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டார். இக் கட்டளையைக் கேட்டவுடன் அந்த இருபத்து ஏழுபேரில் ஒருவராகிய யாக்ஞவல்கியர் எழுந்து "சுவாமி, யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது. நானே இதைச் செய்து முடிக்கிறேன்” என்று கூறினார். இதுகேட்ட வைசம்பா யனர் மிகவும் கோபமடைந்து, “என்னுடைய மற்ற சீடர்களை நீ எவ்வாறு குறை கூறமுடியும்? இவ்வளவு அகங்காரம் உள்ள நீ என் சீடனாக இருப்பதற்குத் தகுதியில்லை. ஆகவே என்னிடம் கற்றுக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்று கூறினார். யாக்ஞவல்கியர், 'சுவாமி உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் இவ்வாறு கூறினேன். அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லை. அதற்கு பதிலாக என்மேல் சினம் கொண்டீர்கள். சொல்வதைப் புரிந்து கொள்ளாத குரு எனக்கும் தேவை இல்லை. ஆகவே உங்களிடம் கற்றுக் கொண்டதை இதோ உமிழ்ந்து விடுகிறேன். என்று கூறி உமிழ்ந்தார். அவர் உமிழ்ந்ததை ஏனைய சீடர்கள் தைத்திரப் பறவை வடிவுடன் வந்து உண்டுவிட்டார்கள். இதனால் யஜுர் வேதத்திற்கு மட்டும் 'தைத்திரிய சம்ஹிதை' என்று பெயர் வழங்கலாயிற்று. யஜுர் வேதத்தை இழந்துவிட்ட யாக்ஞவல்கியர் சூரியனையே குருவாக வரித்துத் தவம் செய்தார். அதன் பயனாகச் சூரியன் தோன்றி, யாக்ஞவல்கிய ருக்கு யஜுர் வேதத்தைக் கற்றுத் தந்தார். சூரியனே கற்றுக் கொடுத்ததால் வைசம்பாயனருக்குக் கூடத் தெரியாத பல அர்த்தங்கள் யாக்ஞவல்கியருக்குத் தெரியலாயின.