பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பதினெண் புராணங்கள் ஆவார்கள். ஒயாது விஷ்ணுவை தியானிப்பதால் அவர்கள் வனப்பு வாய்ந்த வடிவத்தைப் பெறுகின்றனர். இதயத்தில் விஷ்ணுவை வைத்துப் பூஜிப்பவர்கள் குற்றம் செய்வதே இல்லை. அத்தகைய பக்தர்கள் பக்கத்தில் செல்லாதே. அப்படிச் சென்றால் வலிமை பொருந்திய விஷ்ணுவின் சக்கரம் உன்னையும் என்னையும் பழி தீர்த்துவிடும். நான்கு வர்ணங்கள் விஷ்ணு பக்தர்கள் என்பவர்கள் விஷ்ணுவால் நியமிக்கப் பட்ட வர்ணாசிரம தர்மங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பர். நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆகும். பிராமணர்கள் கடமையாவன : கற்றல், கற்பித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆகும். சத்ரியர்கள் கடமையாவன : கற்றல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் இவற்றோடு தனுர் வேதம் அறிந்து நாட்டைக் காக்கப் போர் புரிதல். அரசனுடைய கடமை தீயவர்களை தண்டிப்பதும், நல்லவர்களைக் காப்பதும் ஆகும். வைசியர்கள் விவசாயம், ஆடுமாடு வளர்த்தல், வாணிபம் என்பவற்றுடன் கற்றல், யாகம் செய்தல், ஈதல் என்பவற்றைச் செய்ய வேண்டும். சூத்திரர்கள் கடமை ஏனைய மூவருக்கும் தொண்டு புரிதல் ஆகும். இவற்றையல்லாமல் சூத்திரர்கள் வாணிபம், கைத்தொழில் என்பவற்றிலும் ஈடுபடலாம். நால்வருக்கும் பொதுவான சில கடமைகளும் உண்டு. அவை யாவன: பிறரிடம் அன்பு பாராட்டல், தூய்மையோடு இருத்தல், கடினமாக உழைத்தல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், நட்புப் பாராட்டல், துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியவை யாகும. இவற்றையல்லாமல் பிரம்மசரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்ற நான்கு நிலைகளையும் ஒருவன்