பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 பதினெண் புராணங்கள் மகன் பிறந்தான். அவன் பெயர் பரஞ்செயன். ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் நடந்தது. போரில் வெல்ல முடியாத தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். அவர்களிடம் விஷ்ணு, தான் பரஞ்செயன் என்ற பெயரில் பூமியில் அவதரித்திருப்பதாகவும், அவ்வாறு அவதரித்த பரஞ்செயன் தலைமையில் தேவர்கள் அசுரர்களை வெல்ல முடியும் என்றும் கூறினார். அதனால் தேவர்கள் பரஞ்செயனிடம் வந்து தங்களுக்குத் தலைமை ஏற்றுப் போரிட வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்குப் பரஞ்செய்ன் இந்திரனின் தோளில் ஏறித் தான் போரிட வேண்டும் என்றும், அதனை தேவர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குத் தர்ன் தலைமை ஏற்றுப் போரிடத் தயார் என்றும் கூறினான். உடனே இந்திரனும் காளை உருவெடுக்க, அதன்மீது அமர்ந்து அசுரர்களை வென்றான் பரஞ்செயன். தோள் என்ற பொருளுடையது 'ககுத் என்ற சொல். தோளின்மீது அமர்ந்து போரிட்டதால், பரஞ்செயன் அன்று முதல் ககுத்தன்' என்று அழைக்கப் ககுத்தனின் வழியில் வந்தவ்ன் யுவனசா என்ற அரசன். நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால், அதற்கு வேண்டிய யாகம் செய்யுமாறு முனிவர்களிடம் கூறினான். சடங்குகள் நடு இரவில் முடிவு பெற்றதால், முனிவர்கள் புனித நீரினை இரவு முழுவதும் ஒரு பானையில் வைத்திருந்தனர். யுவனசாவின் மனைவிக்கு அந்தப் புனித நீரினைக் கொடுத்தால் பலம் வாய்ந்த மகன் பிறப்பான் என்று கருதிய முனிவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருந்தனர். ஆனால் மிகவும் தாகம் எடுத்த காரணத்தினால், அப்பானையில் உள்ள நீர் புனித நீர் என்பதை அறியாத மன்னன் யுவனசா அதைக் குடித்து விட்டான். இதனால் ஒரு குழந்தை யுவனசாவின்