பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 103 உடலில் புகுந்து மேலும், மேலும் பெரிதாக வளர்ந்தது. அக்குழந்தை இவ்வுலகில் ஜனனம் செய்யவேண்டிய வேளை யில் அம்மன்னனின் வலது பக்கத்தைப் பிளந்துகொண்டு இவ்வுலகிற்கு வந்தது. ஆனால் மன்னன் இதனால் இறக்க வில்லை. ஆயினும் அக்குழந்தைக்குத் தாய் யார் என்ற கேள்வி எழுந்தது. இச்சூழ்நிலையில் இந்திரனே அக் குழந்தைக்குத் தாயாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டான். அக்குழந்தை “மாந்தாதா என்று பெயர் பெற்றது. இந்திரன் வளர்த்ததால் அக்குழந்தை ஒரே நாளில் முழு வளர்ச்சி அடைந்தது. முழு உலகத்தையும் அவனே ஆட்சி செய்தான். மாந்தாதாவின் காலத்தில் செளபரி என்ற முனிவன் பன்னிரண்டு ஆண்டுகள் நீருக்கு அடியில் வாழ்ந்து வந்தான். நீரில் மீன்களின் அரசன் தன் குழந்தைகள், பேரக் குழந்தை களுடன் விளையாடுவதைப் பார்த்தான். உடனே தானும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள், பேரக் குழந்தைகள் பெற வேண்டுமென விரும்பினான். மாந்தாதா அரசனுக்கு ஐம்பது பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டான். ஆனால் வயது முதிர்ந்த தோற்றம் உடைய முனிவனுக்குத் தன் மகளை மணம் செய்து கொடுக்க விரும்பாத அரசன், காரணத்தைக் கூறினால் தன்னைச் சபித்து விடுவானோ என்று நினைத்தான். அதனால் அம்முனிவரிடம் தங்கள் குல வழக்கப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் மணமகனுக்கே மணமுடிப்பதாகக் கூறினார். ஆனால் அரசனின் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட முனிவன் ஒருமுறை அரசனது மகளைப் பார்க்க அனுமதி கொடுத்தால் அவர்களைப் பார்ப்பதாகவும், அவர்களில் யாரேனும் தன்னை விரும்பினால் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான். அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டால் தான் சென்று விடுவதாகவும் கூறினான். இதற்கு அரசனும் ஒப்புக்