பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பதினெண் புராணங்கள் கொண்டான். மிகுந்த தவ வலிமையுடைய செளபரி முனிவன், அரசனது பெண்களைப் பார்க்கச் செல்லுமுன் தன்னை மிகுந்த அழகுள்ள இளைஞனாக மாற்றிக் கொண்டான். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து வர அவர்கள் அ ைஎவரும் தனித்தனியே அவனை விரும்பினர். அவர்கள் அனைவரையும் மணந்து கொண்டு தன்னுடைய ஐம்பது மனைவிகளையும் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற முனிவன், விஸ்வகர்மாவை அழைத்து ஒவ்வொருவருக்கும் அழகிய மாளிகை அமைக்கச் சொன்னான். ஒவ்வொரு மாளிகையிலும் நீர் நிரம்பிய தடாகம் இருக்க வேண்டும் என்றும், அதில் தாமரை மலர் மற்றும், அன்னப் பறவைகள் இருக்க வேண்டும் என்றான். அதைப் போலவே விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தான். ஒருநாள் மாந்தாதா அரசன் தன் பெண்களைக் காண வந்தான். அவர்களில் முதல் பெண் தான் மிகுந்த மகிழ்ச்சி யுடன் இருப்பதாகவும், தன் கண்வன் தன்னுடனேயே இருப்பதால் மற்ற சகோதரிகள் வருந்துவார்கள் என்றே தான் நினைப்பதாகவும் கூறினாள். மற்றொரு மகளிடம் அரசன் கேட்டபோது, அவளும் இதையே கூறினாள். செளபரி முனிவன் தன் தவ வலிமையால் தன்னைப் போல ஐம்பது உருவங்களை உண்டாக்கி இருந்தான். அவனது தவ வலிமை யைக் கண்ட அரசன் அவனை விழுந்து வணங்கினான். சில நாட்களுக்குப் பிறகு தன் மக்களிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்த 'செளபரி முனிவன், இந்தப் பாசம் தன்னுடைய தவத்திற்குப் பெரிதும் இடையூறாக இருப்பதை அறிந்து, இது மாயையின் காரணமாகவே ஏற்பட்டது என்று அறிந்து அன்று முதல் விஷ்ணுவை தியானிப்பதிலேயே தன் மீதமுள்ள நாட்களைக் கழித்தான்.