பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஷ்ணு புராணம் 109 தாய்க்கு இது உனக்கு என்று கூறிவிட்டுக் காட்டுக்குள் சென்று விட்டார். அவர் சென்ற பிறகு சத்தியவதியின் தாய்க்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. யாருடைய பாயசம் சிறந்த புதல்வனைத் தரும் என்று ஐயம் கொண்டாள். உடனே மகளைப் பார்த்து, நானோ சத்திரியன் மனைவி. என் வயிற்றில் பிறக்கும் பிள்ளை இவ்வுலகத்தை ஆள வேண்டும். நீயோ பிராமணன் மனைவி. உன் பிள்ளை சாதுவாகத் தவம் செய்யவேண்டும். ஆகவே உன்னுடைய பாயசத்தை எனக்குக் கொடுத்துவிட்டு என்னுடைய பாயசத்தை நீ சாப்பிடு என்று கூறினாள், மகள் சத்தியவதியும் அதற்கு உடன்படவே பாயசக் கிண்ணங்கள் கை மாறின. காடு சென்ற முனிவன் திரும்பி வந்தவுடன் அவன் மனைவி சத்தியவதி நடந்தவற்றைக் கூறினாள். முனிவர் மிக்க வருத்தத்துடன் “சத்தியவதி! உன் தாயின் மனத்தில் தோன்றிய இந்த எண்ணம் என் மனத்தில் முதலிலேயே தோன்றிவிட்டது. ஆக சிறந்த சத்திரியனுக்குரிய இலக்கணங் களோடு ஒர் ஆண் மகவு பிறக்க வேண்டும் என்றுதான் உன் தாய்க்குப் பாயசத்தைத் தயாரித்தேன். துரதிருஷ்டவசமாக நிலைமை மாறிவிட்டது" என்று வருந்தினார். பாயசம் கை மாறியதால் சத்தியவதி வயிற்றில் ஜமதக்கினியும், அவள் தாய் வயிற்றில் விசுவாமித்திரனும் தோன்றினர். தன் மகனை விடத் தன் பேரனுடைய வழித் தோன்றல்கள் சிறந்த வீரர் களாக இருக்கவேண்டும் என்று அவள் தாய் விரும்பியதால், அவள் பேரனாகிய ஜமதக்கினியின் மகன் பரசுராமன் பிராமணனாகப் பிறந்தும் சத்ரியர்களையெல்லாம் ஒழிக்கும் வீரமுடையவனாக இருந்தான். சயமந்தக மணியின் கதை சத்தியபாமாவின் தந்தையாகிய சத்ரஜித் கடற்கரையில் இருந்துகொண்டு சூரியனைப் பிரார்த்தித்தான். ஆழ்ந்த அந்தப்