பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பதினெண் புராணங்கள் பிரார்த்தனைக்கு மகிழ்ந்த சூரியன் சத்ரஜித்தின் முன் தோன்றி னான். ஆனால் சத்ரஜித் கண்களைத் திறந்தவுடன் சூரிய னுடைய ஒளி அவன் கண்களை மூடச் செய்து விட்டது. அவன் சூரியனைப் பார்த்து, 'ஐயனே! உன் கழுத்தில் ஏதோ ஒளி பொருந்தியதாக நகை அணிந்திருக்கிறாய். அந்த ஒளி காரண மாக உன்னை நான் தரிசிக்க முடியவில்லை. உன்னை தரிசிக்கு மாறு எனக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே சூரியன் தன் கழுத்தில் இருந்த சயமந்தக மணியைக் கழற்றிவிட்டார். இப்பொழுது சூரியனைக் கண் களால் கண்டு மகிழ்ந்த சத்ரஜித் அவரைத் துதித்தார். அவன் துதியில் மகிழ்ந்த சூரியன் உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்!” என்றான். இந்த சயமந்தக மணியை எனக்குத் தரவேண்டும் என்று சத்ரஜித் கூறியவுடன் மறு வார்த்தை பேசாமல் கொடுத்துவிட்டார். அதை அணிந்து கொண்ட சத்ரஜித் துவாரகைக்குள் நுழைந்தான். அவன் மேனி முழுவதும் இந்த மணியின் காரணமாக மிகப்பெரிய ஒளி வீசிற்று. மக்கள் அவனை சூரியன் என்றே நினைத்து விட்டனர். வீட்டிற் கொண்டு சென்று சயமந்தக மணியை ஜாக்கிரதையாக ஒளித்து வைத்திருந்தான். அந்த மணி ஊருக்குள் வந்த காரணத்தினால் துவாரகையில் எவ்வித தீமையும் ஏற்படாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் பெறும்படியான சூழ்நிலை உருவாயிற்று. - மன்னன் சத்ரஜித் தன்னிடம் இந்த மணி இருப்பதையும் தன் மருமகனாகிய கிருஷ்ணன் அதை உக்கிரசேனருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைப்பதை அறிந்து தன் சகோதரனாகிய பிரசேனனிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொன்னான். அந்த மணியின் சிறப்பு என்ன வென்றால் நல்லவர்கள் கையில் இருந்தால் நாட்டுக்கும் நல்லதை உண்டாக்கி தினமும் ஒரு பொற்காசு தரும். சத்ரஜித்