பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 பதினெண் புராணங்கள் அடைந்ததால் அவன் மிக்க பலத்துடன் போர் செய்து ஜாம்பவானைத் தோற்கடித்தான். இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ஜாம்பவான் கிருஷ்ணன் வீரத்தை மெச்சித் தன் பெண் சாம்பவதியை அவனுக்கு மணம் செய்து கொடுத்து அந்த மணியையும் பரிசளித்தான். கிருஷ்ணன் தன் மனைவியோடு துவாரகைக்கு வந்தான். கிருஷ்ணனின் மீட்சியைக் கண்ட யாதவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நடந்தவற்றை அறிந்த சத்ரஜித் கிருஷ்ணனை சந்தேகித்ததற்காக வருந்தினான். அதற்காகத் தன் மகள் சத்யபாமையை மணம் செய்து கொடுத்தான். சயமந்தக மணி மீண்டும் சத்ரஜித்தை அடைந்தது. சத்தியபாமையைத் தாங்கள் அடைய வேண்டும் என்று கருதி இருந்த அக்ருவர், கிருதவர்மா மற்றும் சடதன்வா ஆகியோர் கிருஷ்ணன் மேல் பொறாமையும் வெறுப்பும் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாண்டவர்கள் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் எரிந்து போனார்கள் என்பதைக் கேள்விப்பட்டுக் கிருஷ்ணன் அங்கே சென்றான். கிருஷ்ணன் இல்லாத அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சடதன்வா சத்ரஜித்தைக் கொன்று மணியைக் களவாடி விட்டான். தன் தகப்பன் கொல்லப்பட்டதை அறிந்த சத்தியபாமா கடுஞ்சினம் கொண்டு ஒரு ரதத்தில் ஏறி வாரணாவதம் சென்று கிருஷ்ணனிடம் நடந்தவற்றைக் கூறினாள். மீண்டுவந்த கிருஷ்ணன் தன் சகோதரன் பலராமனிடம் நடந்தவற்றைக் கூறி நாம் இருவரும் ஒன்று சேர்ந்து சடதன்வாவைக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இருவரும் சடதன்வாவை எதிர்த்தனர். இவர்கள் எதிர்ப்பை சமாளிக்க