பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 113. முடியாத சடதன்வா அக்ருவரிடம் மணியைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். தன்னிடம் மணி இருப்பதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்ட அக்ருவர் மணியை வைத்துக் கொண்டான். சடதன்வா கிருஷ்ணனுக்கு அஞ்சி குதிரையில் ஏறி ஓடினான். கிருஷ்ணனும், பலராமனும் பின் தொடர்ந்தனர். காட்டின் எல்லையில் குதிரை இறந்து விடவே அவன் இறங்கி ஓடினான். காட்டிற்குள் ரதம் செல்லாது ஆதலால் பலராமனை ரதத்தோடு இருக்கச் சொல்லி கிருஷ்ணன் தான் மட்டும் ஓடினான். இறுதியில் சடதன்வாவைக் கண்டு அவன் தலையை சீவி விட்டான். அவன் உடல் முழுதும் தேடிப் பார்த்தும் மணி அங்கு இல்லை என்று கண்டு கொண்டான். பலராமனிடம் மீண்டுவந்த கிருஷ்ணன் நடந்தவற்றைக் கூறினான். கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பலராமன், 'உன் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. இன்றிலிருந்து நீ யாரோ, நான் யாரோ! நீ உன் வழியில் செல், நான் என் வழியில் செல்கிறேன் என்று கூறிவிட்டு விதேக நாட்டிற்குச் சென்று மன்னன் ஜனகனிடம் விருந்தினனாக இருந்தான். அங்கு வந்த துரியோதனன் பலராமனிடம் கதாயுதப்போர் முறையைக் கற்றுக் கொண்டான். - துவாரகையிலிருந்த யாதவர்கள் பலர் கிருஷ்ணனிடம் மணியில்லை என்பதை அறிந்து கொண்டு பலராமனைச் சமாதானப்படுத்தி துவாரகைக்கு அழைத்து வந்தனர். இதனிடையில் தன்னிடம் மணி இருப்பதைக் கிருஷ்ணன் சந்தேகித்து தன்னைக் கொன்று விடுவான் என்று அஞ்சிய அக்ருவன் ஒன்றன் பின் ஒன்றாகப் பல யாகங்களைச் செய்தான். எத்தகைய பகைவர்களையும் யாகம் செய்யும் பொழுது கொல்லக் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். அக்ருவரிடம் மணி இருந்ததால் துவாரகை செழிப்பாக սպ.-8