பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 115 சந்தனுவின் கதை குரு வம்சத்தில் வந்த பிரதிபாவின் மகனாகிய சந்தனு இரண்டாவது மகனாகப் பிறந்தும் முதல் மகனாகிய தேவபி காட்டிற்குச் சென்றுவிட்டதால் அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சந்தனு கங்கையையும், சத்தியவதியையும் மணந்தார். கங்கையின் மகனாக பீஷ்மன் பிறந்தான். சத்திய வதியின் வயிற்றில் விசித்ர வீரியனும், சித்ராங்கதனும் பிறந்தனர். விசித்திர வீரியன் மரபில் திருதிராஷ்டனும், பாண்டுவும் தோன்றினர். திருதிராஷ்டன் புதல்வர் துரியோதனன் முதலிய நூறு பேர், பாண்டுவின் புத்திரர்கள் ஐவர். அவர்களே பஞ்ச பாண்டவர்கள். பியுகத்தின் தோற்றம் விஷ்ணு புராணத்தின் நாலாம் பகுதி கலியுகத்தில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளை விரிவாகத் தெரிவிக்கிறது. பத்மாநந்தன் என்ற மன்னன் தோன்றி, சத்ரியர்கள் அனைவரையும் இரண்டாவது பரசுராமனைப் போல ஒழித்து விடப் போகிறான். அவனுக்கு 8 பிள்ளைகள் தோன்றுவார்கள். சத்ரியனுக்குப் பிறகு இவர்களே நூறு ஆண்டுக்காலம் ஆட்சி செய்வார்கள். ஆனால் கெளடில்யன் என்னும் பிராமணன் இவர்களைக் கொன்று விடுவான். அதன்பிறகு 'மெளரியர்கள் எனப்படும் சூத்திரர்கள் ஆளுவர். சந்திரகுப்தனையே கெளடில்யன் அரசனாக நியமிப்பான். மெளரியர்கள் நூற்றி முப்பத்திஏழு ஆண்டுகளும், பிறகு வரும் அங்க அரசர்கள் நூற்றிப் பன்னிரண்டு ஆண்டுகளும், கன்வ அரசர்கள் நானுற்றி ஐம்பத்தி ஆறு ஆண்டுகளும் அரசாள்வர். அதன்பிறகு வேறு வேறு பரம்பரையினர் ஆள்வர். கவி மிகக் கொடுமையான யுகமாக இருக்கும். ஆட்சி செய்பவர்கள் போடும் வரிக் கொடுமை தாங்காமல் மக்கள்