பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$22 பதினெண் புராணங்கள் அசுரனை வென்று, "பாஞ்சஜன்யம்' என்ற சங்கைக் கண்ணன் பெற்றான். கம்ஸன் ஜராசந்தன் என்ற மன்னனுடைய அஸ்டி, பிரப்டி என்ற இருமகள்களையும் மணந்திருந்தான். மருமகன் கொல்லப் பட்டதை அறிந்திருந்த ஜராசந்தன் பெரும் படையோடு மதுராவை எதிர்த்தான். கிருஷ்ணனுக்குத் தேவருலகத்திலிருந்து இரண்டு தேர்களும், சார்ங்கம் என்ற வில்லும், கெளமேதகி" என்ற ஒர் ஆயுதமும், எடுக்கக் குறையாத இரண்டு அம்பறாத் துணிகளும் வந்து சேர்ந்தன. இவற்றை வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் ஜராசந்தனைத் தோற்கடித்தனர். இதேபோல ஜராசந்தன் 18 முறை படையெடுத்துப் பதினெட்டு முறைகள் தோற்றுப் போனான். 'கார்கியா என்ற பிராமணன் யாதவர்களால் மிகவும் அவமானப்படுத்தப்பட்டான். தென் கடற்கரைக்குச் சென்று 12 ஆண்டுகள் இரும்புத் தூள்களைத் தின்று தவம் புரிந்தான். தவத்தின் முடிவில் மகாதேவர் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, யாதவர்களை வெல்ல ஒரு மகன் வேண்டும் என்றார். அப்படியே மகாதேவர் வரமளித்தார். கரிய நிறமுடைய ஒரு பலசாலியான பிள்ளை பிறந்தான். யவன அரசன் பிள்ளை இல்லாததால் இந்த பிராமணன் மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு காலயவனன்' என்ற பெயரும் தந்தான். இப்பிள்ளை பெரியவன் ஆனதும் நாரதனைப் பார்த்து மிக பலமுடைய அரசர் யார் யார் என்று வினவினான். அரசர்கள் பட்டியலை நாரதரிடம் தெரிந்து கொண்டு மதுராவை எதிர்க்கத் திட்டமிட்டான். இதை அறிந்த கிருஷ்ணன் காலயவனன் தந்தை பெற்ற வரத்தை அறிந் திருந்ததால் அவனை எதிர்ப்பது கஷ்டம் என்று அறிந்து கொண்டார். அதே நேரம் காலயவனன் போர் தொடுக்கும் பொழுது, ஜராசந்தனும் சேர்ந்து கொண்டால், பிரச்சனையைச்