பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பதினெண் புராணங்கள் நாட்டிற்குத் திரும்பாமல் வேறொரு நாட்டை ஸ்தாபித்து அங்கு வாழ்ந்து வந்தான். கிருஷ்ணனுக்கும், ருக்மணிக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னனை, சம்பராசுரன் என்பவன் தூக்கிச் சென்று கடலில் எறிந்து விட்டான். அக்குழந்தை தப்பிச் சென்று பின் சம்பராசுரனைக் கொன்று விட்டது. பிறகு பிரத்யும்னன் ருக்மியின் பெண்ணை மணந்து கொண்டான். அந்த மண விழாவில் ருக்மியும் பலராமனும் சூதாடுகையில், வாய்ச் சண்டை முற்றிவிட பலராமன் ருக்மியையும், அவனுக்கு உதவியாக வந்த அரசர் பலரையும் கொன்று விட்டான். பிருத்வியின் மகனாகிய நரகாசுரன் பிரத்ஜோதிஷ்புரம்' என்ற தலைநகரில் இருந்து உலகை ஆண்டு வந்தான். மிக்க கொடியவனாகிய அவன் தேவமாதர், அசுரமாதர், மானிட மாதர் என்பவர்களில் பதினாறாயிரம் பெண்களைச் சிறையில் அடைத்து வைத்திருந்தான். ஒருமுறை இந்திரன் கிருஷ்ணனிடம் வந்து நரகாசுரன் கொடுமையைச் சொல்லி வருத்தப்பட்டான். உடனே கிருஷ்ணன் கருடனை நினைத்தார். கருடன் வணங்கி நின்றவுடன் சத்தியபாமாவும் கிருஷ்ணனும், பிரத்ஜோதிஷ் புரத்திற்குச் சென்றனர். மிகப் பெரும் போரை விளைத்து நரகாசுரனை வென்றனர். பாரிஜாத மரம் நரகாசுரனை வென்ற கிருஷ்ணன் இந்திரனுடைய நகரமாகிய அமராவதிக்கு சத்தியபாமாவுடன் சென்றார். தேவர்கள் வந்து கிருஷ்ணனை வழிபட்டனர். இந்திரன் தாயாகிய அதிதியிடம் இருந்து நரகாசுரன் பறித்துச் சென்ற காதணிகளைக் கிருஷ்ணன் அவளிடம் தந்தார். சத்திய பாமா, கிருஷ்ணன் இருவரையும் அவள் ஆசீர்வதித்தாள். அமராவதியில் இருந்த பாரிஜாத மரத்தைப் பார்த்து அதைத் துவாரகைக்குக் கொண்டு செல்ல விரும்பினார். உடனே