பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 甘27 கெளரவர்களால் கைது செய்யப்பட்டான். இதை அறிந்த யாதவர்கள் கெளரவர்கள்மேல் போர் தொடுக்க விரும்பினர். அதைத் தடுத்து பலராமன் தான் தனியாகச் சென்று காரியத்தை முடித்து வருவதாகக் கூறிவிட்டு அஸ்தினாபுரத்து எல்லையை அடைந்தான். பலராமன் வருவதைக் கேள்வியுற்ற பீஷ்மர், கர்ணன், துரியோதனன் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வந்து அவனை வணங்கி வரவேற்றனர். உபசரணை முடிவில் பலராமன் ‘சம்பாவை விடுவித்துத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று யாதவர்கள் விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்ட கெளரவர்கள் கடுங்கோபம் கொண்டனர். “யாதவர்கள் எங்களுக்குச் சமமானவர்கள் அல்லர். எங்கள் தரத்திற்கு மிகவும் கீழாக உள்ள அவர்கள் எங்களை இவ்வாறு கேட்பது வேலைக்காரன் தன் எஜமானை ஏவுவது போல் இருக்கிறது. பலதேவா, நீ திரும்பிச் செல்லலாம்” என்று கோபத்தோடு கூறிவிட்டு, அவர்கள் நகருக்குள் போய்விட்டனர். அவர்கள் சென்றபிறகு நகர எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த பலராமன் தன் கலப்பையை பூமியில் ஊன்றி அழுத்தினான். அஸ்தினாபுரம் முழுவதையும் கங்கைக்குள் அமிழ்த்திவிட வேண்டும் என்பதே அவன் விருப்பம். நகரத்தின் ஒரு பகுதி சாய்ந்து கங்கையின் அருகில் போவன்தக் கண்ட கெளரவர்கள், கலங்கிப் போய் ஒடி வந்து பலராமன் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். சம்பாவையும், அவன் மனைவியையும் பலராமனோடு அனுப்பி வைத்தனர். விஷ்ணு புராணத்தின் முடிவுரை - யாதவர்கள் முடிவு பிண்டாரகா என்ற கூேடித்திரத்தில் கண்வர், விஸ்வா மித்திரர், நாரதர் ஆகிய முனிவர்கள் தங்கி இருந்தனர். ஆணவம் படைத்த யாதவ இளைஞர்கள் சிலர், கிருஷ்ணனின்