பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 129 ஒருவர் அடித்துக் கொண்டு இறந்துவிட்டனர். கிருஷ்ணனும், அவன் நண்பன் தாருகனும் எவ்வளவு முயன்றும் இச் சண்டையை நிறுத்த முடியவில்லை. இறுதியில் இவர்கள் இருவர், எங்கோ அமர்ந்திருந்த பலராமன் தவிர யாரும் மிஞ்சவில்லை. யாதவர்களின் மிகப் பெரும் பகுதி இவ்வாறு அழிந்துவிட்டது. இந்த நிலையில் கிருஷ்ணனும், தாருகனும் பலராமனைத் தேடிச் சென்றனர். பலராமன் பக்கத்தில் சென்றதும் ஒர் அதிசயக் காட்சி நடைபெற்றது. பலராமன் வாயில் இருந்து ஒரு மிகப் பெரிய பாம்பு வெளிப்பட்டுக் கடலுக்குள் சென்றது. தங்களுடைய முடிவை அறிந்து கொண்ட கிருஷ்ணன், தாருகனை அழைத்துப் பின்வருமாறு பேசினான்: "தாருகா! பலராமன் முடிந்தபிறகு என்னுடைய காலமும் நெருங்கி விட்டதை அறிகிறேன். நீ துவாரகைக்குச் சென்று மன்னர் உக்கிரசேனரிடம் நான் சொன்னதைச் சொல்வாயாக. இங்கு வந்த யாதவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் நானும் சென்று விடுவேன். நான் சென்ற பிறகு துவாரகையைக் கடல் பொங்கி எழுந்து மூடிவிடும். அதற்குள் ஒடிச்சென்று அருச்சுனனை அழைத்து வா. துவாரகையில் எஞ்சி இருக்கிற யாதவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு அருச்சுனனுக்குச் சொல். உடனடியாக அவர்கள் துவாரகையைக் காலி செய்ய வேண்டும்” என்று கூறித் தாருகனை அனுப்பி வைத்தான். அதன்பிறகு கிருஷ்ணன் ஒய்வெடுத்துக் கொள்ள பலராமனின் பக்கத்தில் படுத்திருந்தான். மன்னர் உக்கிரசேனர் இரும்பு உலக்கையைப் பொடி செய்த பொழுது, பொடியாகாத ஒரு பகுதியைக் கடலில் தூக்கி எறிந்தார் அல்லவா? அதனை ஒரு மீன் உண்டது. அந்த மீனை ஒரு வேடன் பிடித்து அரியும்பொழுது அதில் இருந்து இரும்புத் துண்டை எடுத்து ஒர் அம்பாகத் தீட்டினான் цц.—9