பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 பதினெண் புராணங்கள் படுத்திருந்த கிருஷ்ணனின் பாதம் ஒரு மான் போல அந்த வேடனுக்குத் தெரியவே, தான் தீட்டி வைத்திருந்த அம்பை மான் என்று நினைத்து கிருஷ்ணன் பாதத்தில் ஏவி விட்டான். அதனால் கிருஷ்ணன் இறக்க நேரிட்டது. தான் எய்த அம்பு கிருஷ்ணனின் மேல் பாய்ந்து விட்டது என்று அறிந்த வேடன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டான். கிருஷ்ணன் அவனை மோட்சத்துக்கு அனுப்பிவிட்டான். துவாரகைக்கு வந்த அருச்சுனன் கிருஷ்ணன், பலராமன், யாதவர்கள் இறந்ததைக் கண்டு அவர்களுக்கு இறுதிக் கடன் செய்தான். உக்கிரசேனர், வசுதேவர், தேவகி, ரோகிணி முதலானோர் தீப்பாய்ந்து தங்கள் வாழ்நாளை முடித்துக் கொண்டனர். கிருஷ்ணன் வீட்டில் வளர்ந்த பாரிஜாத மரமும், சுதர்மா என்ற மண்டபமும் தேவலோகத்தைச் சென்று அடைந்து விட்டன. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் கலி யுகம் பிறந்து விட்டது. கடல் கொந்தளித்து கிருஷ்ணனுடைய வீட்டைத் தவிர துவாரகை முழுவதையும் மூழ்கடித்து விட்டது. எஞ்சியவர்களை அழைத்துக்கொண்டு அருச்சுனன் புறப்பட்டுச் செல்கையில், கொள்ளைக்காரர்கள் இவர் களுடைய சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வளைத்துக் கொண்டார்கள். அருச்சுனன் தன் வில்லை எடுத்தான். ஆனால் அம்பு எய்யும் சக்தியை இழந்துவிட்டதை அறிந்து கொண்டான். கிருஷ்ணன் போன பிறகு தன் பலம் முழுவதும் போய்விட்டது என்பதை அருச்சுனன் உணர்ந்தான். கலியுகம் கலியுகம் பிறந்து விட்டதால் அது எவ்வாறு இருக்கும் என்று மைத்ரேயி கேட்க பராசர முனிவர் பதில் சொல்ல ஆரம்பித்தார். தர்ம சாத்திரங்களில் சொல்லப்பட்ட வர்ணாச்சிரம தர்மம் கலியுகத்தில் பின்பற்றப்பட மாட்டாது.