பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரியும் சூதர்களுக்கென்று சில கடமைகளைக் கூறியுள்ளனர். அரசர்களுடைய வரலாற்றையும், அவர்கள் முன்னோர் களின் வரலாற்றையும், தெய்வங்களின் வரலாற்றையும் இச் சூதர்கள் புராணங்களாகப் பாடி எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது பொதுமக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் இவற்றைக் கூறவேண்டும். இங்கு குறிக்கப்பட்ட சூதர்கள் என்பவர்கள் பிராமணப் பெண்ணிற்கும், பிராமணரல்லாத ஒர் ஆணுக்கும் பிறந்தவர்கள் ஆவர். பெரும்பாலான புராணங்களின் தொடக்கத்தில் அப்புராணங்களை முனிவர்களுக்கு எடுத்துக் கூறும் லோம ஹர்ஷனர் என்பவரும் ஒரு சூதரே ஆவார். இவர் வேதவியாசரின் சீடரும் ஆவார்) இக் காலத்தில் கூடக் கற்றவர்கள் பலரும், வேதத்தை அத்யயனம் பண்ணும் பிராமணர்களும் மற்ற பிராமணர்களும் கூட ஒரு தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். வேதம் என்பது பிராமணர்களுடைய தனிச் சொத்து என்றும், அது பிறரால் படிக்கப்படக் கூடாதது என்று எண்ணும் தவறான கொள்கை இருந்து வருகிறது. இதுபோன்றவற்றைப் போக்கவே வாயு புராணம் போன்ற புராணங்கள் இதனை மறுத்துப் பேசுகின்றன. யாஸ்க்கர் முனிவரின் கொள்கைப்படி புராணங்கள் என்பவை என்றோ நிகழ்ந்த நிகழ்ச்சியை இன்றுள்ள அறிவையும், அனுபவத்தையும் கொண்டு அப்பழைய நிகழ்ச்சிக்குப் புதிய விளக்கம் தருவதாகும். வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையை, நிகழ்ச்சிகளை தேனொழுக்குப் போல் சொல்வதில்லை. ஒரு நூறாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் நிகழ்ந்த பெரிய நிகழ்ச்சிகளை மட்டும் அது குறித்துச் சொல்லும். இடையே நிகழ்ந்த சிறுசிறு நிகழ்ச்சிகள் இப்பெருநிகழ்ச்சிக்கு எவ்வாறு உதவியாக அல்லது விரோதமாக இருந்தன