பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 133 தாழ்ந்த பிறப்பினர் என்றும், பெண்கள் ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறார்கள் என்றும் கூறிச் செல்கின்றன. இதன் எதிராக விஷ்ணு புராணம் இதுபற்றிக் கூறும் அரிய செய்தியினைக் கீழே தந்துள்ளோம்). ஒருநாள் பல முனிவர்கள் கூடி பகவான் வேத வியாசரைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் வருகின்ற நேரத்தில் வேதவியாசர் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். தம்மிடம் சில முக்கியமான செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வருகிறார்கள் என்பதைத் தம் ஞான திருஷ்டியால் அறிந்த வேதவியாசர் அவர்கள் காதில் விழும்படியாக மிக உரத்த குரலில், “சூத்திரர்கள் உயர்ந்தவர்கள்; பெண்கள் உயர்ந்தவர்கள், கலியுகம் மிக உயர்ந்தது” எனக் கூறினார். அவர் குளித்துக் கரைக்கு வந்தவுடன் அவர் கூற்றைக் கேட்டுக் குழப்பமடைந்த முனிவர்கள், “நாங்கள் இதுவரையில் கேள்விப்பட்டது வேறாக உள்ளதே. கலியுகம் மிக மோசமானது, துத்திரர்கள் தாழ்ந்த பிறப்பினர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருந்தோம். எங்கள் சந்தேகங்களைப் போக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர். வியாசர் சொல்ல ஆரம்பித்தார்: “சத்திய யுகம் முதலிய வற்றில் எல்லாரும் நேர்மை உடையவர்களாகவும், அந்தந்த வர்ணத்திற்குக் குறிக்கப்பட்ட ஒழுக்கங்களைப் பின்பற்றுப வர்களாகவும் இருந்தார்கள். கலியுகத்தில் இந்த ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி நடப்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் மிகக் கடினமாக உள்ளது. ஆடம்பரம், செல்வச் செருக்கு, அதிகாரம் என்பவற்றில் சிக்கிய மூன்று வர்ணத்தாரும் இத்தனையையும் மீறித் தம் வர்ணத்திற்கு வகுக்கப்பட்ட வழிகளில் செல்வது ஏறத்தாழ முடியாத காரியம் ஆனால் சூத்திரர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு என்று தனியாக எந்தக் கடமையும் விதிக்கப்படவில்லை. ஆகவே