பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பதினெண் புராணங்கள் அவர்கள் தாங்கள் செய்யும் வேளாண்மை முதலிய தொழில் களில் முழு ஈடுபாட்டோடு பணிபுரிந்து பிறருக்கு உபகாரமான வாழ்க்கையையும், எளிமை நிறைந்த வாழ்க்கையையும் கைக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் கடமையிலிருந்து தவறிய முதல் மூன்று வர்ணத்தாரைவிட இவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். இதனால் சூத்திரர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினேன். பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக் கென்று தனியாக எதையும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் கணவன்மார்களுக்கும், குடும்பத்திற்கும் வேண்டியதைத் தன்னலம் இல்லாமல் அன்போடு செய்வதால் ஏனையோரைவிட அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். அனைவரும் செம்மையாக நடந்து கொள்ளும் மற்ற யுகங்களில் தனிப்பட்ட ஒருவர் செம்மையாக நடந்து கொள்கிறார் என்று கூறுவதால், தனிச் சிறப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் பலரும் கடமை மறந்து செல்வச் செருக்கில் ஈடுபட்டு, பிறருடைய நன்மையைக் கருதாமல் வாழுகின்ற இந்தக் கலியுகத்தில், ஒருசிலர் பண்புடையவர்களாக வாழ்வதால் அவர்கள் தனியே சிறப்பிக்கப்படுகிறார்கள். அதனால்தான் கலியுகம் சிறந்தது என்று கூறினேன்.”