பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1. வாயு புராணம் (சிவ Читта) இப்புராணம் பற்றி. வாயு புராணம், சிவ புராணம் என்றும் கூறப்பெறும். மிகப் பழைமையான புரானங்களில் இதுவும் ஒன்று. இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புராணமும் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகையில் ஆரம்பித்து, பரணியில் முடிகிறது. கி.மு. 550இல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து, அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் பழக்கம் ஏற்பட்டதால், இப்புராணம் அதற்கு முற்பட்டது என நினைக்க இடமுண்டு. புராணங் களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது. இப்புராணத்தில் காணப்படுகின்ற பல பாடல்கள் மார்க்கண்டேய புராணத்திலும் காணப்படுகின்றன. ஸ்காந்தம் இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று கூறினாலும், இப்பொழுது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12,000 பாடல்களே உள்ளன. இது நான்கு பெரும் பாகங்களையும், 112 அதிகாரங்களையும் கொண்டது.