பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பதினெண் புராணங்கள் பாசுபத யோகம் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. இப்புராணத்தில், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே இருவருக்கும் மேலான தெய்வம் என்றும், அச் சிவனே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளார் என்றும், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும் விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் கூறுகிறது. மனித குலத்தின் நன்மைக்காகவே சிவன் உள்ளர் என்றும், சிவன் என்ற பெயருக்கு மங்களம், நன்மை செய்பவர் என்ற பொருளுண்டு என்றும் இப்புராணம் பேசுகிறது. நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் லோம ஹர்ஷனரைச் சந்தித்து, "முனிவரே! வேதவியாசரிடத்தில் நேரிடையாக புராணங்களைக் கற்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். இதுவரை தாங்கள் பலவற்றைச் சொல்லியும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆசையும், பலவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணமும் எங்களை வாட்டு கிறது. சிவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று அவர்கள் கேட்டவுடன், லோமஹர்ஷனர் எனக்குத் தெரிந்த அனைத்தையும், ஒன்றையும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசத் துவங்கினார். வெகு காலத்திற்கு முன்னர் பிரம்மனின் புத்திரனாகிய நாரதர் தம் தந்தையைப் பார்த்து, சிவ பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பிரம்மன், நாரதருக்குக் கூறியதை இப்பொழுது அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன். பிரபஞ்சத் தோற்றத்தின்போது எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் விஷ்ணு படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அவர் தொப்புளில் இருந்து பொன்னிறத்துடன் ஜொலிக்கும்