பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 137 தாமரைத் தண்டு ஒன்று மிக உயர்ந்து நின்றது. ஆயிரக் கணக்கான இதழ்களை உடைய அத் தாமரையில் பிரம்மன் இருந்தான். அந்த பிரம்மன் தான் யார், எங்கிருக்கிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்ற சந்தேகங்களுடன் சுற்று முற்றும் பார்த்து ஆராயத் தொடங்கினான். மெதுவாக அத் தாமரைத் தண்டைப் பிடித்துக் கீழே இறங்கிய பிரம்மன் அதைச் சுற்றி நூறு ஆண்டுகள் தேடினான். தாமரைத் தண்டின் தொடக்கத்தைக் காணமுடியவில்லை. இப்பொழுது தான் பிறந்த தாமரைப் பூவில் தான் பிறந்த நடுப்பகுதியைத் தேட முயன்றான். நூறு ஆண்டுகள் தேடியும் தான் புறப்பட்ட இடத்தை அடைய முடியவில்லை. களைத்துப் போன பிரம்மன் ஒரு இடத்தில் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டான். அப்பொழுது “பிரம்மனே! தவம் செய்” என்று ஒரு குரல் கேட்டது. யார் அக்குரலுக்குரியவர் என்று தெரியாவிட்டாலும் பிரம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தான். தவம் முடிந்தவுடன் விஷ்ணு எதிரே நின்றார். விஷ்ணுவைப் பார்த்த பிரம்மன் நீ யார்? என்று கேட்டான். உடனே விஷ்ணு “என் கைகளைப் பார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டிருக்கும் என்னைத் தெரிய வில்லையா? நான்தான் விஷ்ணு. என்னுடைய உடம்பிலிருந்து தான் நீ தோன்றினாய்’ என்றார். அந்த வார்த்தைகளை நம்பாத பிரம்மன் விஷ்ணுவுடன் சண்டை போடத் துவங்கினான். இலிங்கத் தோற்றம் - பிரம்மனும் விஷ்ணுவும் தம்முள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜோதி வடிவமான லிங்கம் ஒன்று வந்து நின்றது. பிரம்மனும் விஷ்ணுவும் தங்கள் சண்டையை நிறுத்திக் கொண்டு, இடையே வந்தது யார் என்று நினைத்தனர். அந்த ஜோதி ஸ்வரூபம் கண்ணுக்கெட்டிய தூரம் உயர்ந்தும்,