பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 பதினெண் புராணங்கள் மிகக் கீழே சென்றும் காட்சி அளித்தது. அதைப் பார்த்த விஷ்ணு, பிரம்மனே! நம்முடைய சண்டையை நிறுத்திக் கொள்வோம். இந்த வடிவத்தின் ஆதியையும், அந்தத்தையும் நாம் காணவேண்டும். நான் காட்டுப் பன்றி வடிவெடுத்து இதன் அடியைக் காண விரும்புகிறேன். நீ அன்னப் பறவை வடிவெடுத்து, இதன் முடி எங்கிருக்கிறதென்று பார்த்து வா என்று கூறினார். விஷ்ணுவின் யோசனையைக் கேட்ட பிரம்மன் உடனே அன்னப் பறவையாக மாறி மேலே மேலே பறந்து சென்றான். விஷ்ணு, ஆண்பன்றி வடிவாகி பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே சென்றார். 4000 ஆண்டுகள் அவர்கள் இருவரும் தேடும் பணியில் ஈடுபட்டும் லிங்கத்தின் அடி முடியைத் தேட முடியவில்லை. பிறகு இருவரும் பழைய இடத்திற்கு வந்து சிவனைத் துதித்தனர். அப்பொழுது 5 முகங்களும், 10 கைகளும் கொண்ட லிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார். இவர்களைப் பார்த்து, "பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் இருவரும் என்னில் ஒவ்வொரு பகுதியாவீர்கள். நாம் மூவரும் ஒன்றுதான். பிரம்மனாகிய உனக்குப் படைக்கும் தொழில், விஷ்ணுவாகிய உனக்குக் காக்கும் தொழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவனாகிய நான் அனைத்தையும் அழிக்கும் தொழில் செய்கிறேன். என்னிடத்திலிருந்து 'ருத்ரன்' என்பவன் தோன்றுவான். அவனும் நானும் ஒன்றுதான். அவன் இந்த அழித்தல் தொழிலைச் செய்வான். நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதையும், ஒரு பணியைச் சேர்ந்து செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ளல் வேண்டும்” என்றார். பிரபஞ்சத் தோற்றம் எங்கும் நிரம்பி இருந்த நீரில் விஷ்ணு ஒரு மிகப் பெரிய முட்டையை உண்டாக்கினார். பிறகு விஷ்ணு மிகப் பெரிய