பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 139 வடிவெடுத்து அந்த முட்டைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். இதனிடையே பிரம்மன் தியானத்தின் மூலமாகவே கர்தமன், தட்சன், மரீச்சி ஆகிய முனிவர்களை உண்டாக்கினான். மரீச்சியின் பிள்ளை காசிபன் தட்சனின் 60 பெண்களுள் 13 பேரை மணந்து கொண்டான். காசிபனின் பிள்ளைகளும், தட்சனின் மற்றப் பெண்களும், ஆதித்தர் களாகவும், தைத்தியர்களாகவும், தானவர்களாகவும், மரங் களாகவும், பறவைகளாகவும், பாம்புகளாகவும் ஆயினர். ருத்ரன் என்ற பெயரில் சிவனே பிரம்மாவினின்று தோன்றினான். இந்த ருத்ரன் தட்சனின் மகளாகிய சதியைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் ருத்ரனும் தட்சனும் ஒருவரையொருவர் வெறுத்தனர். ருத்ரனைத் தள்ளி வைத்து விட்டு தட்சன் யாகம் ஒன்று ஏற்பாடு செய்தான். சதியை அழைக்காவிடினும், அவள் சென்று அதில் கலந்து கொண்டாள். தட்சன் அவளைப் பேசிய ஏச்சுக்களால் சதி தன் உயிரை விட்டு விட்டாள். இதனால் கோபமுற்ற ருத்ரன் தன்னுடைய துணைவனை அழைத்து தட்சனுடைய யாகத்தை அழித்து அவனையும் கொன்று வருமாறு கட்டளையிட்டான். தட்சன் யாகம் அழிக்கப்பட்டு அங்கு வந்த தேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் ருத்ரன் கோபம் தணிக்கப்பட்டு தேவர்கள் பிழைக்கச் செய்யப் பெற்றனர். சதிஇமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் பிறந்தாள். மறுபடியும் சிவபெருமானை மணந்தாள். தாரகாசுரன் கதை தாரா என்ற அசுரனுக்குத் தாரகன் என்ற பிள்ளை தோன்றினான். தாரகன் தேவர்களை வெல்ல வேண்டும் என்று கடுந்தவம் செய்ய முடிவு செய்தான். ஒரு காலைக் கட்டை விரலில் ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலை மடக்கிக்