பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


t40 பதினெண் புராணங்கள் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே, தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். அதன்பிறகு தண்ணிர் குடிப்பதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் உட்கொண்டு இன்னொரு நூறாண்டு தவம் செய்தான். நீரின் நடுவே நின்றும், பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் நூறு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி மற்றுமொரு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். இறுதியாக பிரம்மன் தோன்றி, "உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக!' என்று வேண்டினர். அவர்கள் விருப்பப்படியே மன்மதன் சிவனிருக்கும் இடம் சென்றான். அவன் வரவால் இயற்கையும் கூடக் கால