பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xvi என்பதைக் குறிப்பிடுவதில்லை. புராணங்களில் வரும் மரபு மன்னர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அந்தந்த மன்னருடைய ஆட்சிக்காலத்தில் விரிவாக எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தன என்பது உண்மைதான். ஆனால் காலதேவனின் கொடுமையாலும், படையெடுப்பு, வெள்ளம், நெருப்பு ஆகியவற்றாலும் இவை அழிந்து விட்டன. ஆதலால் நமக்கு அவை கிடைக்கவில்லை. இன்று கிடைத்துள்ள புராணங்களும் வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்டவையல்ல. பெளராணிகர்களின் கைவண்ண மும் இதில் இடம் பெற்றுள்ளமையால் அவை ஒருசில மன்னர்களை அதீத ஆற்றலுடையவர்களாகக் காட்டிச் செல்கிறது. அந்த மன்னர்களின் வரலாற்றிலும் ஒரு தொடர்ச்சி காணப்படுவதில்லை. பல புராணங்களிலும், குறிப்பாக விஷ்ணு புராணத் திலும் யவனர், சாகர்கள், கம்போஜர்கள் ஆகியவர்களைப் பொதுவாகக் குறிப்பிடுகின்றது. மார்க்கண்டேய புராணத் திலும் பிரம்மாண்ட புராணத்திலும் பாரதவர்ஷத்தின் கிழக்கில் கிராதர் நாடும் மேற்கில் யவன நாடும் தெற்கில் பொதிகை மலையும், வடக்கே இமயமலையும் எல்லை களாகக் கூறப்பட்டுள்ளன. புராணங்கள் 18 என்ற எண்ணிக்கையுடன் இப்பொழுது இருந்தாலும் இந்தப் பதினெட்டும் ஒன்றிலிருந்தே கிளைத்தன என்று மச்ச புராணம் குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் நூறு கோடி பாடல்களுடன் கூடிய மச்ச புராணம் மட்டுமே இருந்தது. நாளாவட்டத்தில் அறிஞர்களும் பெளராணி கர்களும் குறிப்பிட்ட ஒரு தெய்வத்திற்குத் தலைமைத் தன்மை தருவதற்காக இப்புராணங்களை இயற்றினர். உதாரணமாக விஷ்ணு புராணம், பாகவத புராணம் போன்றவை விஷ்ணுவைச் சிறப்பித்தும், வாயு புராணம், இலிங்க