பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பதினெண் புராணங்கள் சிவனைப் பார்க்க முடியாது. கடும் தவம் ஒன்றினால்தான் அவரைக் காண முடியும். அதைவிடக் கடுமையான தவத்தை மேற்கொண்டால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே தாங்கள் கெளரிசிகரம் என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்” என்று கூறிவிட்டுப் போனார். பார்வதியும் தாய் தந்தையரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம் அணிகலன்கள், ஆடைகள் அனைத்தையும் துறந்து மரஉறி உடுத்தி கெளரிசிகரம் என்ற மலை உச்சி சென்று கடும் தவம் இயற்றினாள். வெயில், மழை, குளிர், பனி போன்ற எதைக் கண்டும் துவளாமல் தவத்தை மேற் கொண்டாள். அவளுடைய தவத்திற்கு அஞ்சிக் கொடிய விலங்குகளும் அப்பால் சென்றுவிட்டன. தேவர்கள் அனைவரும் கூடி சிவபெருமானிடம் சென்று, ‘ஐயனே! பார்வதியின் கடுந் தவத்திற்குப் பரிசாகத் தாங்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினர். அதற் கிணங்கிய சிவன், கிழட்டு அந்தணர் வேடம் பூண்டு பார்வதி தேவியின் பர்ணசாலை சென்றார். அந்தணரைக் கண்ட பார்வதி அவருடைய பாதங்களுக்கு மலரிட்டு வழிபட்டாள். அந்த வேதியர், 'அம்மா, நீ எதற்குத் தவம் செய்கிறாய்? என்று கேட்டார். பார்வதி தன் கருத்தைக் கூறியதும், 'அம்மா நீ பெருந்தவறு செய்துவிட்டாய். சிவபிரான் ஒரு பைத்தியக் காரன். ஐந்து முகங்களும், சாம்பல் பூசிய உடம்பும், ஜடா முடியும், பாம்பை அணிந்தவனுமாகிய அவனை மணக்க நினைப்பது முட்டாள்தனம்’ என்று கூறினார். கடும் கோபம் கொண்ட பார்வதி, கிழட்டுப் பிராமணரே, நீர்தான் முட்டாள். சிவபிரானின் பெருமை தெரியாமல் உளருகின்ற உம்மைப் பெரியவர் என்று மதித்து மலரிட்டு வணங்கியது என் தவறு. உம்முடைய முகத்தில் விழிப்பதே பாவம். நான் வெளியே போய் விடுகிறேன் என்றாள். அவள் திரும்பியதும் சிவபிரான்