பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 143 தம்முடைய உண்மையான வடிவத்தைப் பெற்றுக்கொண்டு. “பார்வதி, திரும்பிப்பார். நீ யாரை நினைத்துத் தவம் செய்தாயோ, நானே வந்திருக்கிறேன்” என்றதும், பார்வதி திரும்பிப் பார்த்துப் பெருமகிழ்ச்சியடைந்தாள். சிவன் என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, பார்வதி, எல்லார் எதிரிலும் என்னை மணக்க வேண்டும்’ என்றாள். சிவபெருமான் அதனை ஏற்றுக் கொண்டார். சிவ - பார்வதி திருமணம் கைலையில் இருந்த சிவன் சப்தரிஷிகள் என்று சொல்லப்படும் ஏழு முனிவர்களை அழைத்து, இமவானிடம் சென்று அவனுடைய மகளான பார்வதியைத் தான் மணக்க விரும்புவதாகச் சொல்லுமாறு பணித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட முனிவர்கள் இமவானைக் கண்டு சொல்ல, அவனும் பெரு மகிழ்ச்சி கொண்டான். திருமணத்திற்குரிய நாள் குறிப்பிடப்பட்டது. திருமணத்தன்று முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், தேவர்கள், திக்பாலர்கள் ஆகியவர்களும் திருமால், நாரதர், பிரம்மன் ஆகியவர்களும் வந்து கூடினர். பார்வதியின் தாயாகிய மேனகைக்குத் தன் மருமகனாகிய சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். அப்போது ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தாள். கந்தர்வர்களின் தலைவனாகிய விஸ்வவசு அழகாக இருந்ததால் அவன்தான் மருமகன் என்று நினைத்தாள். நாரதர் இல்லை என்றவுடன் அவனை விட அழகான குபேரனைப் பார்த்தாள். அழகில் ஒருவரை ஒருவர் விஞ்சும்படியாக இருந்த வருணன், அக்னி, இந்திரன், சத்திரன், சூரியன், பிரம்மன், பிரகஸ்பதி, விஷ்ணு ஆகியோரை ஒவ்வொருவராகப் பார்த்து ஒருவரைவிட ஒருவர் அழகாக இருப்பதால் இவர்கள்தான் மாப்பிள்ளையோ என்று சந்தேகப்பட்டாள். நாரதர், இவர்கள்