பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பதினெண் புராணங்கள் அனைவரும் சிவனுடைய பணியாட்கள். அதோபார் சிவபிரான் வருகிறார்’ என்றார். மேனகை திரும்பிப் பார்த்தாள். என்ன கொடுமை, ஒரே பிசாசுக் கூட்டங்கள். எல்லாம் கறுப்பு நிறம். அந்தக் கூட்டத்தின் நடுவே ஐந்து தலைகளுடனும், பத்துக் கைகளுடனும் ஒரு வடிவம். அந்த வடிவமெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் எலும்பு மாலை, பாம்புகள் இடுப்பில் புலித்தோல், தலையில் சடைஇவர்தான் மாப்பிள்ளை என்று நாரதர் சொல்லியவுடன், மேனகை மயங்கியே விழுந்துவிட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், “என்ன ஆனாலும் சரி, இந்தப் பைத்தியத்திற்கு என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன். இந்திரன் முதலிய யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். இல்லை என்றால் அவளை விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடுவேன். என்ன ஆனாலும் இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன்” என்று கூறினாள். இதைக் கேட்ட நாரதர் சிவபிரானிடம் சென்று மிக்க பணிவோடு, 'ஐயனே! தயவு செய்து தங்களின் உருவத்தை மாற்றிக் கொண்டு மேனகையின் துயரத்தைப் போக்குங்கள்” என்று வேண்டிக் கொண்டார். ஒரு விநாடி நேரத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டார், சிவபிரான். அழகே வடிவாக மாறிவிட்ட அவரைப் பார்த்து மேனகை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பிரம்மன் சடங்குகள் செய்ய சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது. திரிபுரத்தின் அழிவு தாரகாசுரனின் மைந்தர்களாகிய வித்யுன்மாலி, தாரகாட்சன், வீர்யவனா ஆகிய மூவரும் கடும் தவம் புரிந்தனர். ஒரே காலில் நின்றும், நீரில் இருந்தும், தலைகீழாக நின்றும் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்தனர். தவத்தின்