பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பதினெண் புராணங்கள் பூமிக்குள் மறைந்து விடுமாறு கூறினாள் விளக்கில் இருந்த சுடரை 'நீ எதைப் பற்றினாலும் தாரதன்மயம் பாராமல் எல்லாவற்றையும் அழித்துவிடும் கொடிய சக்தியைப் பெறுவாய்' என்று சபித்தாள்: பசுமாட்டைப் பார்த்து உன் வாய் பொய்ச் சாட்சி சொன்னதால் அது தூய்மை யற்றுப் போகட்டும். உன் பின் பகுதியே பூஜைக்குரியதாகட்டும் என்றாள்; சம்பங்கிப் பூக்களைப் பார்த்து இன்றிலிருந்து நீங்கள் சிவபிரானுக்கு ஏற்காத பூக்களாகி விடுங்கள் என்று சபித்தாள். அன்றிலிருந்து சம்பங்கிப் பூவைச் சிவபிரான் ஏற்பதில்லை. நாரதரும், சம்பங்கி மரமும் ஒருமுறை நாரதர் திருக்கோகர்ணம் சென்று சிவனை வணங்கப் புறப்பட்டார். வழியில் ஓர் அழகான சம்பங்கி மரம் பூத்துக் குலுங்கி நின்றது. அந்த அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அதன் அருகில் ஒரு பிராமணன் வந்தான். அவன் கையில் ஒரு பாத்திரம் இருந்தது. நாரதர் அவனைப் பார்த்து, “நீ யார்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அந்த பிராமணன் “நான் பிச்சை எடுக்கப் போகிறேன்” என்று பொய் கூறினான். அதை நம்பிய நாரதர், கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கிவிட்டு மீண்டார். கையில் உள்ள பாத்திரத்தில் சம்பங்கிப் பூவை நிறைத்துக் கொண்டு அதை மூடி வைத்திருந்தான். மறுபடியும் அவனைப் பார்த்து “எங்கே போகிறாய்?’ என்றார். ‘பிச்சை கிடைக்கவில்லை. வீட்டிற்குப் போகிறேன்” என்றான். c அவனுடைய வார்த்தைகளில் சந்தேகப்பட்டு நாரதர் சம்பங்கி மரத்தினிடம், “ஏ மரமே! அந்த பிராமணன் உன் பூக்களைப் பறித்தானா?” என்று கேட்டார். பிராமணனைப் போலவே, அந்த மரம், “பிராமணனா, அப்படி ஒருவரும்