பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 149 இங்கு வரவில்லை. என் பூக்களை யாரும் பறிக்க வில்லை” என்று துணிந்து பொய் கூறிற்று. நாரதர் சந்தேகம் வலுக்கவே மறுபடியும் கோயிலுக்குச் சென்று பார்த்தார். சிவலிங்கத்தின் தலையில் புதிய சம்பங்கிப் பூ வைக்கப் பட்டிருந்தது. பக்கத்தில் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு அன்பரைப் பார்த்து, "இந்தப் பூவை யார் லிங்கத்தின் தலையில் வைத்தார்கள்?’ என்று நாரதர் கேட்டார். அந்த அன்பர், "மிகத் தீயவனும், பொய் பேசுபவனும் ஆகிய ஒரு பார்ப்பான் இருக்கிறான். சிவன் தயவை வைத்துக் கொண்டு இந்த ஊர் ராஜாவை கைக்குள் போட்டுக் கொண்டான். அந்த ராஜாவை ஏமாற்றிப் பணம் பறிப்பதுடன் மக்களையும் ஏமாற்றுகிறான்” என்று கூறினார். உடனே நாரதர் சிவலிங்கத்தைப் பார்த்து "இந்த அநியாயம் நடைபெற நீங்கள் உதவியாக இருக்கலாமா?” என்று கேட்டார். "என்னை வந்து பூஜிப்பவர்களை நான் கெடுக்க முடியாது” என்று சிவன் கூறிவிட்டார். இதனிடையில் ஒரு பார்ப்பினி, "ஓ! என்று அழுது கொண்டு கோயிலுக்கு வந்தாள். தன் கணவன் பக்கவாத நோயால் அவதிப்படுவதையும், தன் மகனின் கல்யாணத்திற்கு அரசனிடம் முறையிட்டுக் கொஞ்சம் பணமும், ஒரு பசுவும் அன்பளிப்பாகப் பெற்றதையும், அந்தப் பணத்தில் பாதியை அந்தத் தீய பார்ப்பான் பிடுங்கிக் கொண்டதையும் சொல்லி அழுதாள். கோபம் கொண்ட நாரதர், அந்தத் தீய பார்ப்பானை விராதன் என்ற அரக்கனாகப் போகுமாறு சபித்தார். சம்பங்கி மரம் பொய் சொன்னதால் அந்தப் பூவை சிவன் இனிமேல் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் கூறினார். சாபம் அடைந்த பார்ப்பான் சிவன்மேல் தினம் பூக்களைப் போட்டதால், இராமன் வந்து விராதனைக் கொன்று சாபநீக்கம் செய்வான் என்றும் கூறினார். X