பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xvii புராணம் என்பவை சிவனைச் சிறப்பித்தும், பிரம்ம புராணம் பிரம்மனைச் சிறப்பித்தும், மார்க்கண்டேய புராணம் துர்க்கையைச் சிறப்பித்தும், ஸ்கந்த புராணம் கார்த்திகேயனைச் சிறப்பித்தும் பாடப்பெற்றன. இப் புராணங்கள் அனைத்திலும் அறுபது சதவிகிதம் கதைகள் சிறுசிறு மாற்றங்களுடன் ஒவ்வொரு புராணத்திலும் இடம் பெற்றுள்ளன. பூமியின் உற்பத்தி பற்றியும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கதைகள் இப்புராணங்களில் பேசப்பட்டுள்ளன. ஒரு பொதுவான மூல நூலிலிருந்து பெரும் பகுதி விஷயங் களை எடுத்துக் கொண்டு ஓரளவு தத்தமக்குத் தேவையான புதியனவற்றைச் சேர்த்து ஒவ்வொரு புராணமும் படைக்கப் பெற்றது. இவ்வாறு ஒரு மூலத்திலிருந்து புதிய வடிவுடன் வேறு நூல்கள் தோன்றுவது இயல்பே என்பது வேதங்களி லிருந்தே அறியலாம். யஜுர் வேதத்தின் பெரும்பகுதி ரிக் வேதத்தில் உள்ளவையே ஆகும். இதனால் ஒரே ஒரு மூல புராணத்திலிருந்து இவை தோன்றின என்று நினைப்பதில் தவறில்லை. இப்புராணங்கள் அனைத்துமே, இவ்வுலகிடைப் பிறந்த மனிதன் பல்வேறு சிக்கல்கள் நிறைந்திருக்கும் வாழ்க் ல் எவ்வாறு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், தர்ம, அர்த்த, காமம் ஆகிய மூன்றையும் எப்படி அளவறிந்து வாழ்க்கையில் மேற் கொள்ள வேண்டும் என்பதையும் கதைகளுள் புகுத்தி நமக்கு அறிவுறுத்துகின்றன. இந்த எல்லாப் புராணங்களிலும் முடிவுரை என்ற தலைப்புடன் சில பகுதிகள் காணப்படுகின்றன. இந்தப் புராணத்தை ஒருமுறை படித்தாலும், கேட்டாலும் இன்ன இன்ன பயன் ஏற்படும்; இருமுறை, மும்முறை படித்தால், கேட்டால் இன்ன பயன் ஏற்படும் என்று சொல்லப்