பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பதினெண் புராணங்கள் கணேசன் - கார்த்திகேயன் இருவரிடையே மாறுபாடு சிவனுக்கும் பார்வதிக்கும் கணேசன், கார்த்திகேயன் என்று இரு குமாரர்கள் இருந்தனர். பருவம் அடைந்த இருவரும் திருமணம் செய்துவைக்கும்படி தாய் தந்தையரை வற்புறுத்தினர். இவர்களுள் யாருக்கு முதலில் திருமணம் செய்வது என்று பெற்றோருக்குப் பிரச்சனை. ஒருவருக்கு முதலில் செய்தால் மற்றவருக்கு மனவருத்தம் ஏற்படும் என்பதை அறிந்த பெற்றோர், இதற்கு ஒரு வழியைக் கண்டனர். இருவரையும் அழைத்து சிவன், “நீங்கள் இருவரும் உலகைச் சுற்றி வர வேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கு முதலில் திருமணம் செய்து வைக்கப்படும்” என்றார். இந்த வார்த்தையைக் கேட்ட கார்த்திகேயன் உடனே புறப்பட்டு விட்டார். கணேசன் சிறிது தூரம்கூடத் தன்னால் களைப்படையாமல் போக முடியாது என்பதை உணர்ந்தார். ஆதலால் சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார். உடனே குளித்துவிட்டு வந்து தாய், தந்தை இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் அமரச் செய்தார். அவர்களை ஏழுமுறை சுற்றி வந்து எதிரிலே நின்று வணங்கி, உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரைப் பார்த்துச் சிவன், "உலகைச் சுற்றிவருமாறு உங்களுக்குக் கட்டளையிட்டோம். நீ இன்னும் இங்கேயே இருக்கிறாய். கார்த்திகேயன் முன்னரே புறப்பட்டுச் சென்று விட்டான். உடனே புறப்பட்டுப்போ” என்றார். கணேசன் அவரைப் பார்த்து, "என் அருமைப் பெற்றோரே! தாய் தந்தையை ஒருமுறை பிரதட்சணம் செய்தால் உலகையே ஒருமுறை வலம் வந்ததாக அர்த்தம் என்று வேதங்களில் சொல்லியிருக்கிறது. நானோ என் பெற்றோரை ஏழுமுறை சுற்றி வந்து விட்டேன். அப்படியிருக்க, நான் உலகை வலம் வரவில்லை என்று சொன்னால் வேதத்தில் சொல்லியது